ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்‘..கேமியோ ரோலில் ரஜினிகாந்த்..தரமான அப்டேட்!
சென்னை : லைகா தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்கு 'லால் சலாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய பிரபலமடைந்தன. அந்தப் படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக் பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார்.
தறபோது தனுஷுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் ஐஸ்வர்யா, திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் அடுத்தடுத்து எந்த இயக்குநர் படங்களில் நடிப்பார் என்பது குறித்த தகவல்களும் சமூக வலைத்தளத்தில் கசிந்த வண்ணம் உள்ளது.

170வது படம்
ரஜினிகாந்த் தன்னுடைய 170 ஆவது படத்தை, டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்திலும், வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் ஸ்டாருடன் காமெடி வேடத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'லால் சலாம்' படத்தின் தலைப்பு
அதே போல் ரஜினிகாந்தின், மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு 'லால் சலாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். லால் சலாம் திரைப்படம் வரும் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் ஹெல்மெட் ஒன்று தீயில் எரிந்துக்கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அதில் சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











