Stage on Fire-னா அது இதுதான்.. பாட்ஷா பட பஞ்ச் டயலாக்கை மேடையில் பேசும் ரஜினி.. வைரலாகும் வீடியோ!

சென்னை: சூப்பர் ஸ்டார் இன்னும் எத்தனை மெகா பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தாலும், அவரது மனதுக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது பாட்ஷாவாகத்தான் இருக்கும்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா. ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அந்த படம் உருவாகி இருந்தது.

பாட்ஷா படத்தை இப்பவும் டிவியில் ஒளிபரப்பினால், அதற்கான டி.ஆர்.பி. ரேட்டிங்கே தனியாகத்தான் இருக்கும்.

செம ஸ்டைல்

செம ஸ்டைல்

பாட்ஷா படத்தில் மாணிக்கமாக சிரிப்பதாகட்டும், மாணிக் பாட்ஷாவாக மார்க் ஆண்டனியை எதிர்பதாகட்டும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தன்னுடைய தனி ஸ்டைலை காட்டி நடிகர் ரஜினிகாந்த் அசத்தி இருப்பார். அந்த படத்தின் இசையமைப்பாளர் தேவா ரஜினியின் ஸ்டைலுக்கென்றே "ஸ்டைலு ஸ்டைலுதான்" என்ற பாட்டையும் போட்டிருப்பார்.

பஞ்ச் வசனங்கள்

பஞ்ச் வசனங்கள்

"நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி", "உண்மைய சொன்னேன்" "கெட்டவன்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்.. ஆனா கைவிட்டுடுவான்.. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிட மாட்டான்", "உள்ளே போ" உள்ளிட்ட பல பஞ்ச் வசனங்களும், இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் பாட்ஷாவை ரசிகர்கள் மனங்களில் இருந்து நீங்காமல் வைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்த லாக்டவுனில் பல #Throwback வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்நிலையில், சினிமா விழா ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தின் கெட்டப்பில் வந்து, பாட்ஷா படத்தின் பஞ்ச் வசனங்களை மேடையிலே பேசிய வீடியோ ஒன்று தற்போது செம வைரலாகி வருகிறது.

தலைவா ஆர்மி

தலைவா ஆர்மி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் குறித்த தகவல்களையும், அரிய வீடியோக்களையும் தலைவா ஆர்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டு வருகிறது. அந்த பக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள இந்த த்ரோபேக் வீடியோ ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு பின்னர் இப்படி எந்தவொரு மேடையிலும் ரஜினி பேசியதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்தா பொங்கல்

அண்ணாத்தா பொங்கல்

பேட்ட பொங்கல், தர்பார் பொங்கலை தொடர்ந்து அடுத்த ஆண்டு அண்ணாத்த பொங்கல் ரெடியாகி வருகிறது. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு விஸ்வாசம் படம் படைத்த வெற்றியை போல இன்னொரு பிளாக்பஸ்டரை கொடுக்க கடினமாக உழைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X