‘ஜெயிலர்‘ஷூட்டிங் எப்போது?..அப்போ ரஜினி டெல்லிக்கு எதுக்கு போனார்?

சென்னை : ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா,நயன்தாரா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

ரஜினியின் 169

ரஜினியின் 169

அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால்,ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க நினைத்த ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டார். இதையடுத்து, டாக்டர் படம் வெற்றிபெற்றதால் நெல்சனுடன் ரஜினியின் 169 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் நெல்சன் அதீத கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய நடிகர்கள்

முக்கிய நடிகர்கள்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

ஏகப்பட்ட மாற்றங்கள்

ஏகப்பட்ட மாற்றங்கள்

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை தொடங்காமல் நெல்சன் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் மூலம் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருப்பதால், ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் ஷூட்டிங் எப்போது

ஜெயிலர் ஷூட்டிங் எப்போது

ஜெயில் பின்னணியில் நடக்கும் கதையைக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க இருந்தது. இதற்காக அங்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மாதம் தொடங்க இருந்த நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் சென்னையில் ஜெயிலர் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி போக காரணம்

டெல்லி போக காரணம்

இதனிடையே, நேற்று முன் தினம் ரஜினி டெல்லி சென்ற போது ஜெயிலர் படப்பிடிப்புக்காக செல்வதாக கூறப்பட்டது. ஆனால், 75வது விழா சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல துறையில் சிறந்து விளங்கியவர்களை தேர்வு செய்து ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் கலந்து கொள்வதற்காகத்தான் ரஜினி டெல்லி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலையத்தில் பேட்டி

விமான நிலையத்தில் பேட்டி

இதையடுத்து, ரஜினி நேற்று மதியம் 1 மணிக்கு சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் உங்களது அடுத்தகட்ட செயல்பாடு என்ன? என செய்தியாளர்கள் கேட்டபோது, 'ஜெயிலர்' சூட்டிங் தான்" என பதிலளித்துள்ளார். மேலும், எப்படி இருக்கீங்க சார் என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறேன் என பதிலளித்து விட்டு காரில் ஏறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X