ஸ்பெஷல் பர்சனோடு அண்ணாத்த படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாக உள்ளது.
Recommended Video
படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பான நபர்களுடன் பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது அண்ணாத்த படம். சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்தப் படம் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து 4 நாயகிகள் உள்ளனர்.

நாயகி நயன்தாரா
படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். குஷ்பூ, மீனாவும் படத்தில் உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமர்சியல் படத்தில் ரஜினி நடித்துள்ளது படத்திற்கான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

தாதாசாகேப் பால்கே விருது
சமீபத்தில் கலைத்துறைக்கான உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார் ரஜினிகாந்த். இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை அவர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அண்ணாத்த படம்
இந்நிலையில் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள அண்ணாத்த படம் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. ரசிகர்கள் புக்கிங் துவங்குவதற்காக காத்திருக்கின்றனர். படத்தை பார்த்த விஐபிக்கள் சிறப்பான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

பேரன்களுடன் திரைப்படம்
இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் நேற்றைய தினம் படத்தை பார்த்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் பேரன்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

திருவிழாக் கொண்டாட்டம்
இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தை திருவிழாக் கொண்டாட்டத்துடன் எதிர்கொள்ள ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தில் நட்சத்திர பட்டாளமே உள்ள நிலையில், படம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











