இளையராஜா ஒரு கட்டத்திற்கு மேல் ஓரவஞ்சனை பிடித்தவராகிவிட்டார் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிண்டல்
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது கட்டாயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலகநாயகன் கமல்ஹாசனும்தான். தற்போதைய தமிழ் சினிமாவில் இருவரும் சீனியர்களாக இருப்பது மட்டும் இல்லாமல், நல்ல நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் இணைத்த புள்ளி மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் என்றாலும் அதன் பின்னர் இவர்கள் நடித்த சினிமாக்களும், இவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் நேரடியாக ஒரே தேதியில் வெளியாகி அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தியதும் அதன் மூலம் வியாபாரத்தை பெருக்கியதும் முக்கிய காரணமாக உள்ளது.
ஒரே நேரத்தில் இவர்கள் இருவரது படமும் ரிலீஸ் என்றால், ரிலீஸாகவுள்ள இரண்டு படங்களின் போஸ்டர்களில் ஒரு பெயர் மட்டும் அப்படியே இருக்கும் என்றால் அது, இசைஞானி இளையராஜாதான். அண்ணக்கிளி படத்தில் அறிமுகமானதில் இருந்து இளையராஜா தமிழ் சினிமாவில் டாப் கியரில் வேகமாகச் சென்று உயரம் தொட்டது மட்டும் இல்லாமல், அந்த இடத்தில் இரண்டு சாகாப்தங்களுக்கு மேல் தன்னை நிலை நிறுத்தியும் கொண்டார்.

தீபாவளுக்கு மோதிய ரஜினி கமல்: 1991ஆம் ஆண்டு தீபாவளிக்கு கமல்ஹாசனின் குணா திரைப்படமும் ரஜினிகாந்தின் தளபதி திரைப்படமும் வெளிவந்தது. இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜாதான். இரண்டு படங்களின் பாடல்களும் ஹிட். இரண்டு படங்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு படங்களும் இருவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக மாறியது.

ஆளுமைகள்: ரஜினி, கமல், இளையராஜா என இந்த மூன்று பெரும் தமிழ் சினிமா ஆளுமைகளும் ஒரே மேடையில் இருப்பதோ அல்லது ஒருவரைக் குறித்து மற்றொருவர் எதாவது கூறுகின்றார் என்றால் அவையெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்துதான். குறிப்பாக அவர்கள் மூவரும் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்மை மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக ஒரு படத்திற்காக அல்லது ஒரு பாடலுக்காக அவர்கள் போட்டுக்கொண்ட அன்புச் சண்டைகள் குறித்து கேட்கும்போது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், பல சினிமா பிரபலங்களுக்கும் விருந்துதான்.
இளையராஜாவும் கமலும்: இப்படியான நிலையில் இசைஞானி இளையராஜா குறித்தும் உலக நாயகன் கமல் ஹாசன் குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காணெளி வாயிலாக கலந்து கொண்டு பேசுகையில், " இளையராஜா எனக்கும் நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார். சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். அதேபோல் கமல் ஹாசனுக்கும் நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார். ஆனால் இவையெல்லாம் ஒரு கட்டத்தில் அப்படியே குறைந்துவிட்டது. எனக்கு ஒருகாலத்தில் பொதுவாக என்மனசு தங்கம் போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்த இளையராஜா ஒரு கட்டத்திற்குப் பின்னர் அப்படியே கமல் ஹாசன் பக்கம் சாய்ந்துவிட்டார். கமல் ஹாசன் வேறு வேறு கதைக்களங்களைக் கொண்ட படங்கள் செய்வது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் தேவர் மகன் பாடல்கள் எல்லாம் எவ்வளவு அருமையான பாடல்கள்" என பேசியுள்ளார். இது தொடர்பான காணெளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











