தளபதி படத்தில் ரஜினி மகளாக நடித்த குட்டி பெண்ணை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்த அந்த குட்டிப்பெணின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், அட அந்த குட்டிப்பெண்ணா இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Superstar Rajinikanth thalapathy movie child artist baby vichitra latest photos

இந்த படத்தை தொடர்ந்து, வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் நடந்து வருகிறது. இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் வசூலை ஈட்டிக்கொண்டிருந்தன. இதற்கு முன்னோடியாக அமைந்த திரைப்படம் தான் தளபதி, மணிரத்னம் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாகும். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இப்படத்தில் மம்முட்டி,ஷோபனா, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலமாகத்தான் அரவிந்த்சாமி முதன் முதலாக அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடலும் தற்போதும் காதில் ரீங்காரமிடும்.

உணர்ச்சிகரமான கதை: இந்த பதில் ரஜினி முதலில் ஷோபனாவை காதலிப்பார், ஆனால், இவர்களின் காதல் கைகூடாமல் போகவே ரஜினி விரக்தியில் இருப்பார். அப்போது தான், தன்னுடைய நண்பன் மம்முட்டி சொன்ன ஒரு வார்த்தைக்காக பானுப்ரியா மற்றும் அவளுடைய மகளை தன்னுடைய மனைவி மற்றும் மகளாக ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்வார். அந்த காட்சியை திரையில் பார்க்க மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். இந்த காட்சியில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தவர் தான் பேபி விசித்ரா.

அந்த குட்டி பெண்ணா இவர்: தளபதி படத்தில் அழகான க்யூட் பேபியாக இருந்த இவர், தற்போது வளர்ந்து அடையாளமே தெரியாத அளவிற்கு லேடி விசித்ராவாக இருக்கிறார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் தளபதி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X