ரஜினியின் தலைவர் 169 ஹாட் அப்டேட்... தயாரிக்க போவது இவர்கள் தான்
சென்னை : ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்கள் நடக்கும் படப்பிடிப்புடன் இப்படத்தின் வேலைகள் நிறைவடைய உள்ளன.
லேட்டஸ்ட் தகவலின் படி, ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் ரஜினி சென்னை திரும்ப உள்ளாராம். அதன் பிறகு அண்ணாத்த பட தயாரிப்பாளர்களின் அடுத்த படத்திலும் நடிக்க ரஜினி ஓகே சொல்லி உள்ளாராம். இதனால் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி உள்ளது. டைரக்டர் யார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

கொரோனாவிற்கு பின் தலைவர் 169
ரஜினி விரைவில் சென்னை திரும்ப உள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த சூழல் சரியான பிறகு ரஜினியின் 169 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாகவே அண்ணாத்த படப்பிடிப்பும் மெதுவாக நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

4வது முறையாக சன் பிக்சர்ஸ் படம்
ரஜினி நடித்த தர்பார், பேட்ட, காலா ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் ஏற்கனவே தயாரித்துள்ளது. இந்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டாகின. அது மட்டுமின்றி ரஜினியை, பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதனால் கார்த்திக் சுப்பராஜே ரஜினியை மீண்டும் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டைரக்டர் யார்
ரஜினியின் 169 வது படமாக உருவாக உள்ள இந்த படத்திற்காக டைரக்டர் தேசிங்கு பெரியசாமியும், கார்த்திக் சுப்பராஜும் கதை தயார் செய்து வருகிறார்களாம். ஆனால் தன்னை அடுத்து இயக்க போவது யார் என்பது பற்றி ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

டைரக்டரை முடிவு செய்யும் ரஜினி
இவர்கள் இருவரில் யாரை ரஜினி தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேசிங்கு பெரியசாமியா அல்லது கார்த்திக் சுப்பராஜா அல்லது இவர்கள் இருவரும் இல்லாமல் வேறு ஒருவரை ரஜினி தேர்வு செய்ய போகிறாரா என தெரியவில்லை.

அண்ணாத்த ரஜினி கேரக்டர் இதுதான்
தற்போது நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஜாலியான அன்பான கிராமத்து தலைவராக ரஜினி நடிக்கிறாராம். இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சதீஷ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











