”காக்கா.. கழுகு” கம்பேர் பண்ணி குட்டி கதை சொன்ன ரஜினிகாந்த்.. அந்த ஒரு கூட்டமே ஆடிப்போய் கிடக்கு!

சென்னை: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை கூறினார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 10ந் தேதி படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

Superstar Rajinikanth told Kutty story at Jailer Audio Launch

சூப்பர் ஸ்டார்: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று தடபுடலாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை நடிகர் கவின், விஜே ரம்யா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு ரஜினி காலநிதி மாறனுடன் மாஸ் என்ட்ரி கொடுத்தார். அவர் வந்த போது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தலைவர் தலைவர் என ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தனர். இதனால் உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்களுக்கு தனது வணக்கத்தை கூறிவிட்டு உள்ளே வந்தார்.

கட்டிப்பிடித்த ரஜினி: உள்ளே வந்த ரஜினி, அங்கு அமர்ந்து இருந்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார், அனிருத் இருவரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. இந்த நிகழ்ச்சியில் நெல்சன், அனிருத், சிவா ராஜ்குமார், கலாநிதி மாறன், விக்னேஷ் சிவன் என அனைவரும் ரஜினிகுறித்து பேசினார்.

கதை பிடித்து இருந்தது: இதையடுத்து பேசிய ரஜினி, அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நாம் இப்போது தான் சந்திக்கிறோம். அண்ணாத்த படத்திற்கு பின் சரியான கதை, இயக்குநர் அமையாததுதான் காரணம். நெல்சன் சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவருக்கு காமேடி சென்ஸ் அதிகம் அப்படி இருந்தாலும் கேமரா முன்னடி ஹிட்டலர் மாதிரி இருப்பார் என்றார்.

காக்கா கழுகு கதை: தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், காட்டுல பெரிய மிருகங்களை எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு காக்கா அனைவரையும் தொந்தரவு செய்யும், ஆனால், கழுகு யாரையும் தொந்தரவு செய்யாது. காக்கா எப்போ எல்லாம் கழுகுக்கு தொல்லை தருகிறதோ அப்போ எல்லாம் கழுகு எதுவுமே செய்யாமல் மேலே பறந்து போய்விடும். ஆனால், காக்காவாலா சண்டை போட முடியும் ஆனால் அதனால், உயரமாக பறக்க முடியாது. உலகின் உன்னதமான மொழி மெளனம் தான்.

சரியான பஞ்ச்: நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரை தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்லுவாங்க. இங்க குலைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலையை பார்த்துட்டு நேரா போயிட்டே இருக்கணும் என அனல் பறக்க பேசியுள்ளார் ரஜினி. விஜய்யை குறி வைத்து தான் ரஜினி இந்த கதையை கூறியுள்ளதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X