Rajinikanth 75: மரியாதை கொடுக்க வேண்டிய இடத்துக்கு மரியாதை.. யாருக்கும் தெரியாத ரஜினியின் இன்னொரு முகம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலகட்டத்தில் படப்பிடிப்புத் தளத்திலேயே அவமானப்படுத்தப்பட்டது குறித்து அவரே ஒரு முறை தெரிவித்திருந்தார். அது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் சினிமாவில் இப்படி எல்லாமா நடத்துவார்கள் என்ற ஐயப்பாட்டை ரசிகர்களுக்கு எழாமல் இல்லை. இது ரஜினிக்கு நடக்கும்போது அவர் ஆரம்பகால வளர்ந்து வரும் இளம் நடிகர் தான்.

அப்படி இருக்கும்போது ரஜினி, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உச்ச நடிகராக வளர்ந்தது மட்டும் இல்லாமல், இந்திய திரையுலகமே தலைவர் என்று அழைக்கப்படும் அளவுக்கு வளர்ந்த பின்னரும் ரஜினி நடந்து கொண்ட விதம் பலருக்கும் தெரியாத ஒன்று. அவரது இந்த குணம் இன்றைக்கு வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு இருக்க வேண்டிய குணம், இல்லாதவர்கள் அதை உருவாக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறும் அளவுக்கான குணம் அது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.வி.எம் தயாரிப்பில் கடைசியாக நடித்த படம் சிவாஜி. இந்த படத்தில் நடிக்கும்போது தமிழ் திரையுலகில் கேரவன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டம். படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக அவரைக் கேட்காமலே அவருக்கு கேரவன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடானது அவருக்கு மட்டும் இல்லாமல், மற்ற நடிகர், நடிகைகள் சிலருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Superstar Rajinikanth Unknown Story He Follows Some Principles For to AVM Productions And AVM Saravanan
Photo Credit:

ஆனால் இதற்கு முன்னர் ஏ.வி.எம்-இன் தயாரிப்பில் 8 படங்களில் நடித்துள்ளார் ரஜினி. அந்த படங்களின் போது எல்லாம் படப்பிடிப்புக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வந்தால், அங்கு நடிகர்கள் மேக்-அப் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறையில்தான் மேக்-அப் போட்டுக் கொள்வார். அதேபோல் சிவாஜி படத்திற்கும் நேராக மேக்-அப் அறைக்கு சென்றுள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கேரவன் சமாச்சாரத்தை கூற, உடனே அவர் அதை மறுத்துவிட்டார். மேலும் தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்து பணத்தை வீன் செய்யாதீர்கள். நான் எப்போதும் போல இங்கேயே மேக்-அப் போட்டுக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது கேரவன் அனுப்பப்பட்டது, உடனே மற்ற கேரவன்களும் அனுப்பட்டதாம். இது மட்டும் இல்லாமல் வெளியூர்களில் படப்பிடிப்பு என்றாலும், தனக்கு மிகவும் சாதாரண அறை இருந்தால் போதும் என்பாராம். சுத்தமான டாய்லெட், சுத்தமான அறையுடன், காலை எழுந்ததும் யோகா செய்வதற்கு ஏற்ற அறையாக இருந்தால் போதும் என்பாராம். இது மட்டும் இல்லாமல், அவருக்கு உணவு வந்தால் அறைக்கு வெளியே வைத்துவிட்டால் போதுமாம். அதை அவரே எடுத்து சாப்பிட்டுவிட்டு அந்த பாத்திரங்களையும் அவரே கழுவி வைத்து விடுவாராம்.

Superstar Rajinikanth Unknown Story He Follows Some Principles For to AVM Productions And AVM Saravanan
Photo Credit:
இவரது இந்த நடவடிக்கைகள் என்பது, ஏ.வி.எம் என்ற நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளரான ஏ.வி.எம் சரவணனின் மீதான மரியாதையின் வெளிப்பாடுதான். சூப்பர் ஸ்டார் சிலரிடம் ரஃப் அண்ட் டஃப் -ஆக எல்லாம் நடந்து கொண்டு இருந்துள்ளார். அதற்கு காரணம் அவரை எதிரில் இருப்பவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை பொறுத்து அவர் நடந்து கொண்டுள்ளார். ஆனால் ஏ.வி.எம் விஷயத்தில் தன்னை உயர்த்திய மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை என்பது, அவருக்கு மட்டும் இல்லாமல் அவரது நிறுவனத்திற்கும், அவர் சார்ந்த அனைத்திற்கும் என்ற கோட்பாட்டை பின்பற்றி வந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X