Vettaiyan Blue Sattai Maran Review: வேட்டையனை பிரித்து மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்.. தரமா செஞ்சுட்டாப்ள
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைப் பாராட்டி தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,மலையால சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து பல்வேறு விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் பலராலும் கவனிக்கப்படும் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், வேட்டையன் படத்திற்கு தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பியாக இருக்கின்றார் சூப்பர் ஸ்டார். இவருக்கு சமூக விரோதிகளைக் கண்டால், அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித்தரும் பழக்கம் எதுவும் இல்லை. அவர்களைப் பார்த்தாலே நாயைச் சுடுவதுபோல் என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுவதுதான் பழக்கம். இன்னொரு பக்கம் அமிதாப் பச்சனை காட்டுகின்றார்கள், அவர் மனித உரிமைகள் ஆணையத்தில் இருக்கின்றார். அவர் இந்த என்கவுன்டருக்கு முற்றிலும் எதிரானவர். அதேபோல் கன்னியாகுமரியில் ஒரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகின்றார் துஷாரா விஜயன். அவர் மிகவும் பொறுப்பான ஆசிரியை என்பதால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.

அந்த ஊரில் கஞ்சா கடத்தும் கும்பல் உள்ளது. அது துஷாராவின் கண்களில் பட்டவுடன், மாவட்ட எஸ்.பியான ரஜினிகாந்த்திற்கு கடிதம் எழுதுகின்றார். இதனால் அந்த கஞ்சா கடத்தும் கும்பலின் தலைவரை என்கவுன்டரில் போட்டுத்தள்ளி விடுகின்றார். அதன் பின்னர் துஷாரா அங்கிருந்து டிரான்ஃஸ்பர் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து விடுகின்றார். இங்கேயும் மிகவும் பொறுப்பான டீச்சராக உள்ளார். ஒருநாள் திடீரென துஷாரா விஜயன் மர்மமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றார். இந்த வழக்கை விசாரிக்க, தலைவர்தான் சரியான ஆள் என அவரை வரச்சொல்லுகின்றார்கள்.

இடைவேளை: குற்றவாளியை எங்கிருந்தாலும் தேடிக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் சென்ற தலைவருக்கு, அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக மாறிவிடுகின்றது. இதனால் தலைவர் வருத்தப்படுகின்றார். அந்த இடத்தில் இடைவேளைக் காட்சி வைக்கின்றார்கள். இடைவேளை வரை கூட படம் நேர்கோட்டில் போய்க்கொண்டு உள்ளது. இடைவேளைக் காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இரண்டாம்பாதி: படத்தின் இரண்டாம் பாதியைப் பொறுத்தவரை கதையில் இதுதான் நடக்கப்போகின்றது என்பதை நம்மால் சர்வசாதாரணமாக யூகிக்க முடிகின்றது. இந்தப் படம் கதையாகவே சில உறுத்தல்கள் இருக்கின்றது. குறிப்பாக சொல்லப்போனால், தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை என்கவுன்டரில் போட்டுவிடவேண்டும் என்ற கொள்கை கொண்டவர் ரஜினிகாந்த். கதைப்படி ரஜினிகாந்த்தே ஒரு கொலைகாரன்தான். நியாயப்படி பார்த்த, அவரையே இன்னொரு நல்ல அதிகாரியை வைத்து என்கவுன்டரில் போடனும். அதைச்செய்யாமல் விட்டுவிட்டார்கள். கொலை செய்த ரஜினிகாந்த் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றார். அதையும் அமிதாப் பச்சன் அமர்ந்து பார்க்கின்றார்.

மியூசிக்: நீட் கோச்சிங் சென்டர் நடத்தி அயோக்கியத்தனம் செய்கின்றான் வில்லன் என சொல்லுகினார்கள். நியாயமாக பார்த்தால் நீட் தேர்வை கொண்டுவந்தவர்கள்தானே அயோக்கியர்கள் என்று படம் எடுத்திருக்க வேண்டும். படத்தில் தலைவரின் பார்வையில் ஒரு சண்டைக்காட்சி எடுத்திருந்தார்கள். அந்த சண்டைக் காட்சி சிறப்பாக இருந்தது. அனிருந்த் மியூசிக்கில் முதல் பாடல் நன்றாக இருந்தது. இடையிடையில் இசை தூக்கலாக இருந்தாலும் படம் முழுக்க ஓகேவாகத்தான் இருந்தது.

ரியாக்ஷன்: அதேபோல் அமிதாப் பச்சன் சிறப்பாக நடித்திருந்தார். ஃபகத் ஃபாசிலும் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்க வேண்டுமா என யோசிக்க வைக்கின்றது" என விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ரஜினி போன்ற மாஸ் ஹீரோவை வைத்து சமூக அக்கறையுடன் கதை சொல்லி இருக்கின்றார்கள். படம் நன்றாக உள்ளது. ப்ளூ சட்டை மாறனுக்கு சூப்பர் ஸ்டாரைப் பிடிக்காது. அதனால்தான் அவர் வேண்டுமென்றே இப்படிக் கூறுகின்றார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











