ரஜினி vs கமல்.. தெறிக்கும் டிரெண்டிங் போட்டி.. இந்த வருஷம் பாக்ஸ் ஆபிஸிலும் இந்த மேஜிக் நடக்குமா?

சென்னை: கடந்த ஆண்டு ரஜினி படமே வராத குறையை அந்த படம் தீர்த்து வைத்தது. இந்நிலையில், அந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினரை அழைத்து பாபா படத்தை பரிசாக அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கருப்பு உடையில் செம சூப்பராக ரஜினிகாந்த் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியான நிலையில், #SuperstarRajinikanth ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அதே போல இன்னொரு பக்கம் பா. ரஞ்சித்தின் புத்தக நிலையத்தை கமல் திறந்து வைத்த நிலையில், காலையிலிருந்து #KamalHaasan ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

டிரெண்டிங் போட்டி

டிரெண்டிங் போட்டி

ஒரு பக்கம் #KamalHaasan மற்றும் இன்னொரு புறம் #SuperstarRajinikanth என ட்விட்டரை தற்போது ரஜினி கமல் டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு வருகின்றனர். இதற்கு இடையே நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு முழு பாடல் ரிலீஸ் ஆன நிலையில், #JimikkiPonnu ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஏகே 62 அறிவிப்பு எப்போ வரும் என்கிற அறிவிப்பு கூட இன்னமும் வராத நிலையில், அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

ரஜினி vs கமல்

ரஜினி vs கமல்

நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நீண்ட வருடங்களாக நேரடி போட்டியில் இல்லாமல் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இருவரும் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், பதிலுக்கு நான் இந்தியன் 2 படத்தை இறக்குவேன் என கமல்ஹாசன் செம டஃப் கொடுக்க உள்ளார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் சார்பாக தொடங்கப்பட்ட புத்தக நிலையத்தை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், #KamalHaasan ஹாஷ்டேக் காலையிலிருந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கமல்ஹாசனின் அடுத்த பட அறிவிப்புகள் குறித்த அப்டேட்களும் வெளியாகி வருகின்றன. இயக்குநர் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் பண்ணப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பாபா ரீ ரிலீஸ்

பாபா ரீ ரிலீஸ்

கமல்ஹாசன் ஒரு பக்கம் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை தனது அலுவலகத்தில் கொண்டாடியுள்ள புகைப்படங்களும் இன்று வெளியாகி #SuperstarRajinikanth ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகிறது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாபாஜி புகைப்படத்தை பரிசாக வழங்கி உள்ளார் ரஜினிகாந்த்.

ஸ்டைல் சாம்ராட்

ஸ்டைல் சாம்ராட்

72 வயதிலும் செம ஸ்டைலாக ரஜினிகாந்த் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு தனது அலுவலகத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டு கொடுத்த போஸ் புகைப்படங்கள் வெளியாகி அந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜெயிலர், லால் சலாம் என பிசியாக உள்ள ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் இளம் இயக்குநருடன் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X