Rajinikanth: லாரன்சிற்கு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார்.. வாய்ஸ் மெசேஜ் மூலம் பாராட்டு!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் நடன இயக்குனராக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது காஞ்சனா படங்கள் மிகப்பெரிய அளவில் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கைக் கொடுத்தன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் தேவையான உதவிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் தற்போது மாற்றம் அறக்கட்டளையை துவக்கி அதன் மூலம் தனது உதவிகளை தொடர்ந்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் நடிகர் எஸ்ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா, செஃப் வினோத் ஆகியோரும் இணைந்து செயலாற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த அறக்கட்டளை மூலம் பணிகளை இந்த டீம் துவங்கியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழில் நடன இயக்குனராக அறிமுகமாகி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். அவரது காஞ்சனா படங்கள் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கை கொடுத்தன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் லாரன்ஸ். இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து அவர் பல்வேறு தரப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். பலரிடம் இருந்து உதவிகளை பெற்று அவர் இந்த உதவிகளை மேற்கொண்டு வந்தார்.
லாரன்ஸ் உதவிக்கரம்: மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு அவர் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். அவரால் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் தற்போது தான் ஓரளவிற்கு கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளதால் தனக்கு யாரும் நிதி உதவி கொடுக்க வேண்டாம் என்று அவர் சில மாதங்களுக்கு முன்பு கேட்டுக் கொண்டார். தேவையானவர்களுக்கு நேரடி உதவிகளை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது மாற்றம் அறக்கட்டளையை ராகவா லாரன்ஸ் துவக்கியுள்ளார். இதன் மூலம் ஏராளமான உதவிகளை அவர் மீண்டும் முன்னெடுத்து வருகிறார்.
மாற்றம் அறக்கட்டளை: இந்த அறக்கட்டளையில் நடிகர் எஸ்ஜே சூர்யா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் கேபிஒய் பாலாவும் லாரன்சுடன் இணைந்து பல நலத்திட்டங்களை முன்னெடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளைக்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் அனுப்பியுள்ள வாய்ஸ் மெசேஜில் ராகவா லாரன்ஸ் ஆண்டுகளை கடந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
லாரன்சிற்கு ரஜினி வாழ்த்து: தற்போது அவரது மாற்றம் அறக்கட்டளைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். தொடர்ந்து லாரன்சின் உதவிகள் நீடிக்க வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். லாரன்சின் குரு, வழிகாட்டி என பலவுமாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்திலும் ரஜினியின் ஆசியை பெற்ற பின்பே லாரன்ஸ் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது மாற்றம் அறக்கட்டளைக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே அவரது இந்த வாழ்த்திற்கு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் லாரன்சும் தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











