இனிய நண்பர் தமிழக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து... வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்

சென்னை : தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

MK Stalin-க்கு SA Chandrasekhar வாழ்த்து | Oneindia Tamil

இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல்வருக்கு பிறந்தநாள்

முதல்வருக்கு பிறந்தநாள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பின்பு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. இதையொட்டி திமுக கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதையொட்டி தொண்டவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

திறன் மேம்பாட்டு திட்டம்

திறன் மேம்பாட்டு திட்டம்

இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நான் முதல்வன் -உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன்மூலம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டிங், மற்றும் ஜப்பான், சீனா, ரஷ்யா, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர்களுக்கு அஞ்சலி

முன்னாள் முதல்வர்களுக்கு அஞ்சலி

இன்றைய தினம் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் சந்திக்க உள்ளார். இன்று காலை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்கள் நினைவிடங்களிலும் பெரியார் திடலில் பெரியார் நினைவிடத்திலும் நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து

சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட பணிகளை தொண்டர்கள் செய்து வருகின்றனர். அவருக்கு திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இனிய நண்பர் என பதிவு

இனிய நண்பர் என பதிவு

அவர் தனது பதிவில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X