சம்பளம் வேண்டாம்.. ஆனால், லாபத்தில் பங்கு.. கண்டிஷன் போட்ட தலைவர் ஆடிப்போன லைக்கா!
சென்னை: லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்தனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், ரூ.600 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்து சினிமா உலகத்தையே அலறவிட்டது.

மகிழ்ச்சியில் சன் பிக்சர்ஸ்: ஜெயிலர் படம் வாரி வாரி கொடுத்த வசூலால் திக்குமுக்காடிப்போன சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி,நெல்சன், அனிருத் என ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பரிசுகளை அள்ளி வழங்கி அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துவிட்டது. தொடர்ந்து அடுத்தக் கட்டமாக தனது அடுத்த படம் குறித்து அறிவித்தது.
லோகேஷ் கனகராஜ்: தலைவர் 171 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், தீபாவளி அன்று இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரஜினியின் ஆசை சன் பிக்சர்ஸ் நிறைவேறி உள்ளது. லியோ படத்தின் வேலைகளை கவனித்துக்கொண்டே தலைவர் 171 படவேலைகளை லோகேஷ் கனகராஜ் தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது.

லால் சலாம்: தற்போது ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை, அடுத்து படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
கண்டிஷன் போட்ட ரஜினி: இந்நிலையில், இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், தற்போது லைக்கா நிறுவனத்திற்கு புதிய கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லால் சலாம் படத்திற்கு சம்பளம் வேண்டாம், ஆனால், படம் ஓடிய பிறகு லாபம் அடைந்தால் அதில் சரி பங்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். இதைக் கேட்டு லைக்கா ஆடிப் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











