இந்த டாக்டரோட ஆப்பரேஷனே வேற.. ‘தர்மன்’ பக்கா எமதர்மனா இருப்பாரு போலயே.. ஷூட்டிங் ஆரம்பம்!

சென்னை: கே.எஸ். ரவிக்குமார், சுந்தர். சி, சிபி சக்கரவர்த்தி என 3 இயக்குநர்களை தாண்டி 4வதாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தலைவர் 173 திரைப்படம் 'தர்மன்' திரைப்படமாக இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பித்து இனிதே தொடங்கியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 'தர்மன்' படப்பிடிப்பை அதிரடியாக தொடங்கி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth s Dharman Movie Shoot started and Second Look Poster looks Sema Cool
Photo Credit:

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என கொடுத்த வாக்கை காப்பாற்ற 'தர்மன்' ஆக மாறியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து தற்போது செகண்ட் லுக் போஸ்டரையும் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டு தலைவர் ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.

தர்மனா? எமதர்மனா?: உயிரை காப்பாற்றும் கடவுள்கள் தான் மருத்துவர்கள். ஆனால், சில விஷம மனிதர்களை வேறோடு புடுங்கி வேறமாதிரி ஆப்பரசேஷன் செய்ய எமதர்மனாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாறப்போகிறார் என்பது மட்டும் தற்போது வெளியாகி உள்ள 2 போஸ்டர்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எளிமையான 5 ரூபாய் டாக்டர் கதையல்ல என்பதையும் டாக்டர் வித் ஸ்வாக் என்கிற டேக் மற்றும் டெட்லி டாக்டர் என்கிற டேக் மூலமும் உறுதியாகி உள்ளது.

செகண்ட் லுக் போஸ்டர்: கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கன்னா நடிப்பில் உருவாகும் தர்மன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பித்து விட்டது என செகண்ட் லுக் போஸ்டரையும் அஸ்வத் மாரிமுத்து தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரஜினிகாந்த் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளனர்.

அஸ்வத் மாரிமுத்து செம ஸ்பீடு: ஓ மை கடவுளே, டிராகன் படங்களையே குறுகிய கால ஷூட்டிங்கில் முடித்து தரமான சம்பவத்தை செய்திருந்தார் அஸ்வத் மாரிமுத்து. சிபி படம் நீண்ட நாட்கள் எடுக்கும் என்பதால் தான் சீக்கிரமாக முடிக்க அஸ்வத் மாரிமுத்துவை ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ளார் என்கின்றனர். ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பை அஸ்வத் மாரிமுத்து முடித்து விடுவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. எல்ஐகே லேட்டான நிலையில், டிராகனை அதிரடியாக இறக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து தர்மன் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க ரெடியாகி விட்டார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X