நான் தான் கிங்.. நான் வெச்சதுதான் ரூல்ஸ்.. ஆனால், அரசு ரூல் என்ன தெரியுமா? சிக்கலில் ஜெயிலர்!

சென்னை: jailer special show (ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி ரத்து) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இதில், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

Superstar Rajinikanths jailer movie special show cancelled

ஜெயிலர்: சோஷியல் மீடியா ,ஊடகம் என எந்த பக்கம் திரும்பினாலும் ஜெயிலர் படத்தை பற்றிய பேச்சாகவே உள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதையும், குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத ஊரும் இல்லை என்று பஞ்ச் வசனத்தை பேசி ரசிகர்களை ரஜினி மேலும் சூடேத்தி விட்டதால், சோஷியல் மீடியாவில் இந்த விவகாரம் ஹாட் டாப்பிக்காகி உள்ளது. இதனால், ஜெயிலர் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சிறப்பு காட்சி ரத்து: இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்புக் காட்சியாக ஜெயிலர் படம் வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிறப்புக் காட்சி இல்லை என்றும், முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது என்றும் திரையரங்குகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் மோதல்: வழக்கமாக ரஜினி,கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை 4 மணிக்கு திரையரங்கில் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. இதனால், இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

தமிழக அரசின் ரூல்ஸ்: அதுமட்டுமின்றி துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் இல்லை என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனால், கடந்த 7 மாதங்களாக எந்த நடிகரின் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை. இதே ரூல்ஸ் தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கும் பின்பற்றப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X