காக்கா போயிட்டு அந்த கழுகை கொத்தும்.. ரஜினி மாடுலேஷனே வித்தியாசமா இருக்கே.. டிரெண்டாகும் ப்ரோமோ!

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 6ம் தேதி மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், அதன் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா, கழுகு குட்டிக் கதையை ஹைலைட் செய்து சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

Superstar Rajinikanths Kutty Story speech at Jailer audio launch promo out now

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாடுலேஷனே ஒரு மாதிரியாக இருக்கே என கமெண்ட்டுகளும், விஜய் தான் கழுகு என விஜய் ரசிகர்கள் சண்டைகளும் கமெண்ட் பக்கத்தில் களைகட்டி வருகிறது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு: நாளை சன் டிவியில் மாலை 6 மணி முதல் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பாக உள்ளது. ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கலாநிதி மாறன், நெல்சன் உள்ளிட்ட பலரது பேச்சுக்களையும், அனிருத்தின் ஆக்ரோஷமான பாடல்களையும் காண ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

ஏற்கனவே சோஷியல் மீடியாவில் ஆடியோ வெளியீட்டு விழா பேச்சுக்கள் எல்லாம் லீக் ஆனாலும், முழுமையான இசை வெளியீட்டு விழா நாளை ஒளிபரப்பாகிறது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அதற்கான பெரிய ப்ரோமோஷனாக இந்த இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காக்கா கழுகை கொத்தும்: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலாநிதி மாறன் பேசும் போது நடிகர் ரஜினிகாந்த் ரெக்கார்ட் பிரேக்கர் இல்லை ரெக்கார்டு மேக்கர் என பேசியிருந்தார். ஒவ்வொரு பிரபலங்களும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பாராட்டி பேசிய ப்ரோமோக்களை சன் டிவி தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக ரஜினிகாந்த் சொன்ன அந்த காக்கா, கழுகு குட்டி கதை ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வெறியேற்றியுள்ளது.

காக்கா கழுகை கொத்திட்டே இருக்கும்.. கழுகு ஒண்ணும் பண்ணாது, கொஞ்சம் உயர பறக்க ஆரம்பிக்கும்.. காக்காவும் பறக்க ஆரம்பிக்கும், கழுகு இன்னும் கொஞ்சம் மேல போகும்.. ஆனால் காக்காவால முடியாது.. நம்ம வேலையை நாம பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்.. அர்தமாயிந்தா ராஜா.. என ரஜினிகாந்த் பேசும் ப்ரோமோ வெளியான நிலையில், அதில், ரஜினிகாந்தின் பேச்சு மற்றும் அவரது மாடுலேஷனே ஒருமாதிரியாக உள்ளதே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Superstar Rajinikanths Kutty Story speech at Jailer audio launch promo out now

விஜய் தான் கழுகு: ரஜினிகாந்த் காக்கா என விஜய்யை எல்லாம் சொல்லவில்லை என்றும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமாரை தான் சொல்கிறார் என்றும் அரசியல் ரீதியாக சீமானை சொல்கிறார் என ரசிகர்கள் ரஜினி vs விஜய் சண்டையை தவிர்க்க கமெண்ட்டுகளை போட்டு வரும் நிலையில் விஜய் ரசிகர்கள், விஜய் தான் கழுகு என போட்டோ கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X