Rajinikanth: ரஜினி வீட்டிலும் புகுந்த மழைநீர்.. மாட்டிக் கொள்ளாத ரஜினிகாந்த்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாப் புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கும் போயஸ் கார்டனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஜினி வீட்டிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
மிக்ஜாம் புயல்: கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான கனமழை மற்றும் அதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஏரிகளில் அதிகமான நீர்பெருக்கு காரணமாக இந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. பல இடங்களில் முதல் மாடி அளவிற்கு தண்ணீர் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்: புயல் கரையை கடந்து மழையும் நின்ற நிலையிலும் சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீர் வடியாத நிலை காணப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக போராடி பல இடங்களில் இயல்பு நிலையை கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதிலும் வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. இதனால் சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் திரைத்துறை பிரபலங்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நடிகர்கள்: நடிகர் விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகர் அமீர்கான், நமீதா, ஆத்மிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் இந்த வெள்ளத்தில் சிக்கி சமூக வலைதளங்கள் மூலமாக பாதிக்கப்பட்டதை வெளியில் கூறினர். தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வசித்துவரும் போயஸ் கார்டன் பகுதியும் இந்த மழைக்கு மிகவும் கடுமையான பாதிப்புகளை அடைந்துள்ளது. மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்ததை பார்க்க முடிந்தது.
ரஜினியின் வீட்டிற்குள் புகுந்த மழைவெள்ளம்: இந்நிலையில் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் வீடும் மழை வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ரஜினியின் வீட்டிற்குள்ளேயும் தண்ணீர் புகுந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பு காரணமாக வீட்டில் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரும் பண்ணை வீட்டில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த படங்கள்: ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக பொங்கல் ரிலீசாக அவரது லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள போதிலும் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமிட்டாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











