Muthu re release: கமலுடன் போட்டி போடும் ரஜினி.. ரீ ரிலீஸாகும் முத்து.. எப்போது தெரியுமா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் படம் ரீ ரிலீஸாக இருக்கும் நிலையில், ரஜிகாந்த் நடித்த முத்து படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1995ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான முத்து திரைப்படம் மெகா ஹிட்டடித்தது.

superstar rajinikanths rajinikanth muthu movie re release on december 2

இப்படத்தில் மீனா, ரஜினி, சரத்பாபு, ராதா ரவி, ஜெயபாரதி, வடிவேலு, காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முத்து: தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா என 90ஸ் இளசுகளை ஆட்டம் போடவைத்த திரைப்படம் முத்து. இப்படத்தில் ஜமீன்தாராக சரத்பாபு நடிக்க அவருக்கு பணிவிடை செய்யும் வேலையாளாக ரஜினி நடித்திருந்தார். நகைச்சுவை, அதிரடி ஆக்‌ஷன், பாடல், பிளாஷ்பேக் என படத்தின் மொத்த கதையும் சும்மா சூப்பராக இருக்கும்.

மறக்க முடியாத படம்: தியேட்டரில் பல நாட்கள் ஓடிய இந்த திரைப்படம் ரஜினியின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக உள்ளது. முத்து திரைப்படத்திற்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல், ஜப்பானிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்த நாள்: இந்த நிலையில், முத்து படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில், நான் வந்துட்டேன்னு சொல்லு. நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என பபடத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்திருந்தது. டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தயாரிப்பு நிறுவனம் இதை வெளியிட்டு இருந்தது.

முத்து ரீ ரிலீஸ்: தற்போது முத்து திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வரும் டிசம்பர் 2ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி வெளியாகும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8ந் தேதி புதிய பொலிவுடன் வெளியாக உள்ளது அந்த படத்திற்கு போட்டியாக முத்து படம் வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X