போலி என்கவுன்ட்டர்.. தலைவர் 170 படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: விறுவிறுப்பாக தயாராகி வரும் தலைவர் 170 படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

superstar rajinikanths thalaivar 170 story leaked on social media

நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு இணையாக அடுத்த படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் ரஜினி. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு: அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பெரிய பட்டாளமே இப்படத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடந்தது. அதில் ரஜினி, மஞ்சு வாரியர் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. இதனை அடுத்து மும்பையில் அமிதாப் பச்சனின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்தது. திருவனந்தபுரம், மும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

போலி என்கவுன்ட்டர்: மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதால், இப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது தலைவர் 170 படத்தின் கதை போலி என்கவுன்ட்டர் குறித்த கதை என்றும், இதில், அமிதாப் பச்சன் என்கவுன்ட்டருக்கு எதிராகப் போராடும் போராளியாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தலைவர் 171: விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் தலைப்பு, அடுத்த மாதம் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 170 படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்திற்கான கதை விவாத வேலைகள் தொடங்கிவிட்டன. மார்ச் மாதத்தில் இருந்து லோகேஷின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X