அண்ணாத்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினிகாந்த்.. இமான் போட்ட ட்வீட்!
சென்னை: அண்ணாத்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசளித்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜகபதி பாபு மற்றும் பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த.
வசூல் ரீதியாக அண்ணாத்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு புடிச்சு போச்சு
டானாகவும், போலீஸாகவும் நடித்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீர் என அண்ணன் தங்கை பாச சென்டிமென்ட் கதை கொடுத்து மனதில் இடம் பிடித்து விட்டார் இயக்குநர் சிறுத்தை சிவா. அண்ணாத்த திரைப்படம் சூப்பர்ஸ்டாருக்கு ரொம்பவே பிடித்து போனதன் காரணம் தான் தற்போது இப்படி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார்.

தங்க செயின் பரிசு
அண்ணாத்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசளித்துள்ளார். மேலும், அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இமானுக்கும் தங்க செயின்
மருதாணி, வா சாமி, தங்கம் என ஒவ்வொரு பாடல்களையும் அருமையாக இசையமைத்துக் கொடுத்து பிஜிஎம்மில் மிரட்டிய இசையமைப்பாளர் இமானுக்கும் தங்க செயினை பரிசளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதன் புகைப்படங்களை ஷேர் செய்து சூப்பர்ஸ்டாருக்கும் இயக்குநர் சிவாவுக்கும் இமான் நன்றி கூறியுள்ளார்.

சிறுத்தை சிவா
முன்னதாக இயக்குநர் சிறுத்தை சிவாவை அழைத்து தங்க செயின் பரிசளித்த நடிகர் ரஜினிகாந்த் அவருடன் சில மணிநேரங்கள் பேசியது கோடம்பாகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணாத்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தங்க செயின் பரிசளிக்கும் நிகழ்ச்சியிலும் இயக்குநர் சிறுத்தை சிவா கலந்து கொண்டார்.

மீண்டும் சிவா இயக்கத்தில்
நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் வெகு விரைவாக தொடங்கப் போகிறார் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இப்படி அண்ணாத்த டீமுக்கு தங்க செயின் பரிசளித்து வருவது அடுத்த படத்தையும் இயக்குநர் சிவா உடனே இணைந்து பண்ணப் போகிறாரா என்கிற கேள்வியை பலமாக எழுப்புகிறது.


Click it and Unblock the Notifications











