மருதாணி செவப்பு செவப்பு... அள்ளும் அண்ணாத்த படத்தின் 3வது பாடல்!
சென்னை :சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது அண்ணாத்த படம்.
படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் 3வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது, படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தீபாவளி ரிலீஸ்
சூப்பர்ஸ்டாரின் படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது ரசிகர்களுக்கு எப்போதுமே கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் நிலையில் அண்ணாத்த படமும் அந்தக் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தயாராகியுள்ளது. தீபாவளியை இனிப்புடன் மற்றும் ரஜினியின் படத்துடன் கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

வரவேற்பை பெற்ற டீசர், பாடல்கள்
படத்தில் இதுவரை 2 பாடல்கள் மற்றும் டீசர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாடல் டைட்டில் பாடலாக சமீபத்தில் மறைந்த எஸ்பிபி குரலில் வெளியாகி சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து ரஜினி மற்றும் நயன்தாரா இடம்பெற்றிருந்த இரண்டாவது பாடல் மெலடி பாடலாக வெளியானது.
Recommended Video

3வது பாடல் வெளியீடு
தற்போது இன்றைய தினம் மருதாணி செவப்பு செவப்பு என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் திருமணத்திற்கு தயாராகும் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்துக்கூறி ஆட்டம் போடுவது போல காணப்படுகிறது. இதில் மீனா மற்றும் குஷ்பூ ஆகியோர் சிறப்பாக நடனமாடுகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி
ஆனால் இந்தப் பாடலில் நயன்தாரா இடம்பெறாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் பிரம்மாண்டமான வீடும் இந்தப் பாடலில் காணப்படுகிறது. கீர்த்தி சுரேஷை திருமணத்திற்கு மீனா மற்றும் குஷ்பூ தயார் படுத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் இருவருடன் ரஜினிகாந்த் சிறப்பாக ஆடுகிறார்.

சன் பிக்சர்ஸ் வெளியீடு
முன்னதாக இந்தப் பாடல் வெளியீடு குறித்து அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது பாடலை வெளியிட்டுள்ளது. மிகவும் கலர்புல்லாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. முதல் பாடலும் இத்தகைய பிரம்மாண்டத்தில் வெளியான நிலையில் தற்போது இந்தப் பாடலும் அதே ஃபீலை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. மொத்தத்தில் அண்ணாத்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் திருவிழா கொண்டாட்டத்தை அளிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











