அண்ணாத்த படத்திற்கு யூஏ சான்றிதழ்... சரவெடி தீபாவளிக்கு தயாராகும் ரசிகர்கள்!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து கெட்டப்பில் ரஜினி நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்திற்கு தற்போது யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் சிறப்பான வகையில் தயாராகியுள்ளது. டைரக்டர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஆயினும் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ரிலீசுக்கு தயார்
படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு படம் தயாராகியுள்ளது. படத்தின் ப்ரமோஷனையொட்டி, டீசர், மற்றும் பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. முதலில் வெளியான டைட்டில் பாடல் எஸ்பிபி குரலில் வெளியானது. அவரது மறைவால் வருத்தத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு இது ஆறுதலை கொடுத்துள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
இரண்டாவதாக வெளியான அண்ணாத்த படத்தின் பாடல் டூயட் பாடலாக அமைந்தது. நயன்தாரா மற்றும் ரஜினிகாந்த் இந்தப் பாடலில் நடித்துள்ளனர். லிரிக் வீடியோவாக இந்தப் பாடல் வெளியானது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசரும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

அதிரடி சரவெடி
ரஜினியின் படத்திற்கு எப்போதுமே நல்ல வரவேற்பு காணப்படும். குறிப்பாக அவரது படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது அதிரடி சரவெடியாக ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும். இந்நிலையில் அண்ணாத்த படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் தற்போதே ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்கள்.

தீபாவளி சரவெடி
டிக்கெட் புக்கிங்கிற்காக தற்போது முதலே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது படத்திற்கு யூஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த தீபாவளி சும்மா சரவெடி தான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

யூஏ சான்றிதழ்
ரஜினியின் படத்திற்கு பெரும்பாலும் யூ சான்றிதழ் கிடைக்கும். ஆனால் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையொட்டி படத்தில் அதிரடி காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் டீசர் உள்ளிட்டவையும் இந்தக் கருத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











