ஒன்றரை கோடி வியூஸ்களை எட்டிய சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த பாடல்… இமான் மகிழ்ச்சிப்பதிவு
சென்னை : சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் கடந்த 4ம் தேதி தீபாவளியையொட்டி வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் அண்ணாத்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியான நிலையில் தற்போது ஒன்றரை கோடி வியூஸ்களை பெற்றுள்ளது.

அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசானது அண்ணாத்த படம். அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

சிறப்பான வெற்றி
இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பாக அமைந்த நிலையில், இதில் மாறுபட்ட கருத்துக்களும் வெளிவந்தன. ஆயினும் ரசிகர்கள் இந்தப் படத்தின் சென்டிமெண்ட் காட்சிகளை கொண்டாடவே செய்தனர். குறிப்பாக ரஜினி மற்றும் கீர்த்தி சுரேஷின் அண்ணன் தங்கை பாசம் சிறப்பாக பேசப்பட்டது.

சிவா இயக்கம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் இமான். படத்தின் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக படத்தின் அண்ணாத்த பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியானது.

அண்ணாத்த பாடல்
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ஒன்றரை கோடி வியூஸ்களை பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ள நிலையில், வரிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிபி பாடல்
சூப்பர்ஸ்டாருக்காக அதிகமான படங்களில் குறிப்பாக டைட்டில் பாடல்களை பாடியுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் இறுதியாக பாடியுள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடினர். டைட்டில் பாடலாக இநதப் பாடல் அமைந்துள்ளது. மேலும் பாடல் மிகவும் கலர்புல்லாக படமாக்கப்பட்டிருந்ததும் ரசிகர்களை கவர்ந்தது.

சிறப்பான திரைக்கதை
படத்தின் முதல் ஆஃப் கல்யாணம், கொண்டாட்டம் என போகும் நிலையில் படத்தின் இரண்டாவது ஆஃப் கொல்கத்தாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் நகர்வது படத்திற்கான பலமாக பார்க்கப்பட்டது. மேலும் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பான கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்ததும் குஷ்பூ மீனா உள்ளிட்ட முன்னாள் கதாநாயகிகள் அவருடன் நடித்திருந்ததும் சிறப்பாக பார்க்கப்பட்டது.

காமெடி கலாட்டா
சூரி, சதீஷ் உள்ளிட்டவர்களின் காமெடியும் படத்திற்கு பலமாக அமைந்தது. கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக செய்திருந்தனர். படத்தின் திரைக்கதையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. பாடல்களும் படத்திற்கு வலு சேர்த்தது.


Click it and Unblock the Notifications











