'சூப்பர் ஸ்டார்' தான் அடுத்த முதல்வர் ஆகணும்: இயக்குனர் அமீர்
சென்னை: சூப்பர் ஸ்டார் அடுத்த முதல்வராக வேண்டும் என்று லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள லிங்கா இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவுக்கு அனுஷ்கா சுடிதாரிலும், சோனாக்ஷி சேலையிலும் வந்திருந்தனர்.
விழாவில் யார், யார் என்னென்ன பேசினார்கள் என்று பார்ப்போம்,

சோனாக்ஷி
வணக்கம், நான் சூப்பர் ஸ்டார் ஹீரோயின் என்று சோனாக்ஷி தெரிவித்த உடனேயே கைதட்டல் சத்தம் காதை கிழித்தது.

ரவிக்குமார்
ரஜினி டான்ஸ் ஆடியுள்ள வேகத்தைப் பார்த்து நீங்கள் எல்லாம் அசந்து போவீர்கள் என்று லிங்கா இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தார்.

ஏ.ஆர். ரஹ்மான்
தலைவரின் ரசிகராக வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

சௌந்தர்யா
நான் இங்கு தலைவரின் மகளாகவும், ரசிகையாகவும் வந்துள்ளேன் என்று ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தெரிவித்தார்.

விக்ரமன்
மூன்று முடிச்சு நாட்களில் இருந்தே நான் தலைவரின் தீவிர ரசிகன் என்றார் இயக்குனர் விக்ரமன்.

எஸ்.பி. முத்துராமன்
இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் ரஜினிக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளதற்கு அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.

அமீர்
சூப்பர் ஸ்டார் தான் அடுத்த முதல்வராக வேண்டும் என்றார் இயக்குனர் அமீர்.

ஷங்கர்
எந்திரனை விட லிங்கா படம் சூப்பராக ஓடும் என்று இயக்குனர் ஷங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

வைரமுத்து
ரஜினியின் மிகப்பெரிய பொக்கிஷமே எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அவரை நேசிக்கும் ரசிகர்கள் தான் என்றார் கவிஞர் வைரமுத்து.

அனுஷ்கா
ஒவ்வொரு நடிகருக்கும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











