சிம்பு பாட.. ராகவா லாரன்ஸ் ரிலீஸ் செய்ய.. பட்டையக் கிளப்ப வருது ஹர்பஜனின் #SuperStarAnthem
சென்னை: கோலிவுட்டின் புது நாயகன் ஹர்பஜன் சிங் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பிரண்ட்ஷிப் படக்குழு இன்று சூப்பர்ஸ்டார் ஆந்தம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்கிறது.
உயிர் நண்பர்களான ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வரும் படம் பிரண்ட்ஷிப்.
கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் ஹீரோவாகவும், பிக்பாஸ் லாஸ்லியா ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுனும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ஆந்தம்
ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பிறந்த நாள் பரிசாக ஃபர்ஸ்ட் சிங்கிளான சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடலை மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. லவ் ஆந்தம், சென்னை ஆந்தம், பெரியார் குத்து என பல பாடல்களை பாடிய நடிகர் சிம்பு இந்த பாடலை பாடி உள்ளார்.

யார் ரிலீஸ் பண்றா
சிம்பு எப்படி சூப்பர்ஸ்டார் ரசிகரோ, அதே போல மற்றொரு சூப்பர்ஸ்டார் ரசிகரான ராகவா லாரன்ஸ் தான் இன்று மாலை சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடலை வெளியிடுகிறார். #SuperStarAnthem என்ற ஹாஷ்டேக்கில் தற்போது ரஜினிகாந்த், சிம்பு, லாரன்ஸ் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஸ்டெல்லர் லீடர்
நேற்று முதல் #STELLARLeaderRajini என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது ஹர்பஜன் சிங், லாஸ்லியா படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு ஆந்தம் பாடலை உருவாக்கி இருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள் பலவிதமான சூப்பர்ஸ்டார் புகைப்படங்களையும் பதிவிட்டு, ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினி ரசிகன்
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ரஜினி ரசிகர் என்பதால் தான் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆந்தம் பாடலை பிரண்ட்ஷிப் படக்குழுவினர் வெளியிடுகின்றனர். இன்று மாலை வெளியாக உள்ள இந்த பாடலை வேற லெவலில் டிரெண்ட் செய்யவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











