கிரிக்கெட்டை விட பல மடங்கு ஆதரவு ஹஸாரேவுக்கு தரணும்! - ஆமீர்

குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் மிகப் பெரிய அளவில் தங்கள் ஆதரவை அன்னா ஹஸாரேவுக்கு தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அன்னா ஹஸாரேவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். "தேசத்தின் நலன் காக்க தொடங்கப்படும், நடத்தப்படும் எந்த போராட்டமாக இருந்தாலும் அதற்கு எனது முழு ஆதரவும் உண்டு", என்று அவர் கூறியுள்ளார்.
ஆமீர்கான்:
நடிகர் ஆமீர்கான் கூறுகையில், "இந்த நாட்டில் இப்போது கிரிக்கெட்டை விட அதிக ஆதரவளிக்க வேண்டிய, நேசிக்கப்பட வேண்டிய விஷயம் ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான போராட்டம்தான். நாட்டில் மிகவும் வலிமையான ஊழலுக்கு எதிரான அமைப்பு ஒன்று கட்டாயம் தேவை. வலிமையான இந்தியாவை கட்டியெழுப்ப அதுதான் மிகவும் உதவும்..." என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு நீண்ட கடிதமும் எழுதியுள்ளார். அதில், ஹஸாரேவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
"ஊழலால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டின் பல கோடி குடிமகன்களில் ஒருவனாக இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன்", என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் விவேக் ஓபராய், அனுபம் கெர், யோகி ராம்தேவ் என பலரும் அன்னா ஹஸாரேவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தாமும் பங்கெடுத்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











