தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் படத்தை தவறாக சித்தரித்து அவதூறு.. நடிகர் கைது!
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் படத்தை தனது படத்துடன் தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வருகிறார்.
இவர் மேகி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் படத்துடன் தனது படத்தை இணைத்து வெளியிட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்.
இதுகுறித்து அறிந்த மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் சாதிக் பாஷா மீது போலீஸில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மன்னார்குடி நகர காவல் துறையினர் சாதிக் பாஷாவை கைது செய்துள்ளனர்.
சாதிக் பாஷாவை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா ஆளுநர் குறித்து நடிகர் ஒருவர் அவதூறாக போட்டோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











