twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைதேகி காத்திருந்தாள்.. சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த டி.எஸ். ராகவேந்திரா காலமானார்

    |

    சென்னை: குணசித்திர நடிகரும், இசையமைப்பாளருமான டி.எஸ். ராகவேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

    விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தால் படத்தில் அறிமுகமானவர் டி.எஸ். ராகவேந்தர், 75 வயதாகும் இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    Supporting Actor T.S. Raghavendra died

    இந்நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 2 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது என நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வைதேகி காத்திருந்தால், சிந்து பைரவி, சின்ன தம்பி, பெரிய தம்பி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, ஹரிசந்திரா, வாய் கொழுப்பு உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிப்பு மட்டுமின்றி இசைஞானமும் கொண்டவர் டி.எஸ். ராகவேந்தர். 1980ம் ஆண்டு வெளியான யாக சாலை படத்திற்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு உயிர் மற்றும் 1986ம் ஆண்டு வெளியான படிக்காத பாடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    பிண்ணனி பாடகி சுலோச்சனாவை திருமணம் செய்து கொண்டார். போடா போடா புண்ணாக்கு, திருப்பாச்சி அருவாள, லாலா நந்தலால உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி கல்பனா, ராகவேந்திராவுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்பா கதாபாத்திரங்களில் தனது முத்திரை நடிப்பை பதித்த டி.எஸ். ராகவேந்தர்வின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Popular Supporting Actor and musician T.S. Raghavendra died today. 75 year old actor who was debut in Vijaykanth’s Vaidhegi Kathirunthal was no more.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X