twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா கவர்ச்சியில் பொசுங்கும் தீப்பெட்டி கணேசன்கள்.. வாடிய வயிறுகளுக்கு என்று விமோச்சனம்?

    |

    சென்னை: சினிமா ஒரு மாயவலை, கண் விழித்து ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் காணும் கனவு.. இந்த கனவு பல மாயஜாலவித்தைகளை செய்யும். சிலரை சிம்மாசனத்தில் ஏற்றிவிடும் சிலரை, கனவிலேயே வைத்து கொன்று விடும்.

    கேமராவின் வெளிச்சத்தின் முன் ராஜாவாக ஜோலிக்கும் நட்சத்திரங்களின் மவுசு வெளிச்சம் மறைந்தவுடன் காணாமல் போய்விடுகிறது.

    நானும் யுவன் சங்கர்ராஜாவின் வெறித்தனமான ஃபேன் தான்.. ஜிம்மில் பாட்டுப் பாடி அசத்திய பரத்! நானும் யுவன் சங்கர்ராஜாவின் வெறித்தனமான ஃபேன் தான்.. ஜிம்மில் பாட்டுப் பாடி அசத்திய பரத்!

    ஒரு சிகரெட்... ஒரு டீ இதுதான் பல துணைநடிகர்களின் ஒரு நாள் உணவாகவே உள்ளது. சினிமா மீது தீராத ஆசை, காதல், எப்பேர்பட்டாவது உச்சத்தை தொட்டுவிடவேண்டும் என்ற வெறி. வாயிற்றில் ஏற்படும் பசியை ஒரு டீயில் அடிக்கி மீண்டும் கனவுக்குள் புகுந்தி விடுகின்றனர். சினிமாவின் சில சோகங்கள் இதோ..

    140க்கும் மேற்பட்ட படங்களில்

    140க்கும் மேற்பட்ட படங்களில்

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் 'கருப்பன் குசும்புக்காரன் என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கிழக்குச் சீமையிலே முதல் அண்ணாத்த படம் சுமார் 140-க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் தவசி.

    எலும்பும் தோலுமாக

    எலும்பும் தோலுமாக

    எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார் தவசி,புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சைக்குக்கூட பணம் இல்லாம் திண்டாடுவதாகவும், தன்னைப்போலவே பல துணைநடிகர்கள் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதுபோன்ற நலிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். ஆனால், உதவிகள் அவரை தேடி வரும் முன் மரணம் அவரை அழைத்துக்கொண்டது.

    வறுமையின் பிடியில்

    வறுமையின் பிடியில்

    ரேணிகுண்டா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தீப்பெட்டிகணேசன், இவர், பில்லா2, தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார் . பட வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் பிடியில் சிக்கித்தவித்த இவர், மதுரையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    கொரோணாவால் வாழ்வதாரத்தை இழந்த இவர் பெற்ற குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு கூட கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாரப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிக்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    விருச்சிககாந்த்

    விருச்சிககாந்த்

    இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கி படம் காதல் திரைப்படத்தில் விருச்சிககாந்த் என்று சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. இவர் சான்ஸ் கேட்கப் போவதாக அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் என் ராசி விருச்சிகம், சினிமாவில் ரஜினிகாந்த், விஜய்காந்த் போல வர வேண்டும் என்பதற்காக என் பெயரை விருச்சிககாந்த் என மாற்றிக் கொண்டதாக கூறுவார். சிறிய காமெடி சீன் தான் என்றாலும் இது பலரையும் கவர்ந்தது.

    ஆட்டோவிலேயே இறந்தார்

    ஆட்டோவிலேயே இறந்தார்

    பட வாய்ப்புகள் இல்லாதால் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இவரது தாய் மற்றும் தந்தை சமீபத்தில் இறந்ததால், மன அழுத்தத்தில் இருந்த இவர் சாலைகளில் சுற்றித்திரிந்துள்ளார். இவருக்கு சிலர் உதவியும் செய்துள்ளனர். ஆனால், ஊரடங்களால் இவரது நிலைமை மிகவும் மோசமானது. இந்நிலையில், சாலையில் இருக்கும் ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    மண்ணில் புதைந்த கனவு

    மண்ணில் புதைந்த கனவு

    இவர்கள் அனைவரும் சினிமாவை நம்பி பிழப்பு நடத்தியவர்கள். ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட மாட்டோமா, ஒரு சிறு கதாபாத்திரமாவது கிடைத்துவிடாதா, என்று அலைந்து திரிந்து இறுதியில் எந்த கனவும் நிறைவேறாமல், இவர்களது கனவுகள் மண்ணில் இவர்களோடு புதைந்து விடுகின்றன.

    ஒருவேளை உணவு

    ஒருவேளை உணவு

    இவர்களுக்கு உதவி கரம் நீட்ட சில நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள். ஆனால், அனைத்தும் கை மீறி போன பிறகே ஊடகங்கள் வாயிலாகவோ, செய்திகள் வாயிலாவோ இவர்களுக்கு தெரிய வருகின்றன. நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இதுபோன்று நலிவுற்ற துணை நடிகர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வேளை உணவுக்காவது வழிவகுத்தால் போதுமானதாக இருக்கும். மேலும், உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒன்றாக இணைந்து துணை நடிகர்களுக்கு குறைந்தபட்சம் ஏதாவது உதவியாவது செய்யலாம். இறந்தபின் பட்டாடை போற்றுவதை விட இருக்கும் போது அவர்களின் வாழ்க்கைக்கு வழி வகுத்தால் அவர்கள் மட்டும் அல்ல அவர்களது சன்னதிகளும் உங்களை வாழ்த்தி வணங்கும்.

    Read more about: thavasi தவசி
    English summary
    Supporting actors die of poverty ... Roundup Story
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X