சென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை ஒருவர் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. இவர் சினிமா துணை நடிகையாக உள்ளார்.

ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது வீட்டின் எதிரே காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி வாலிபர்கள் சிலர் புறாவை எடுக்க முயன்றனர்.

மாறி மாறி தாக்குதல்

மாறி மாறி தாக்குதல்

அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்து பாண்டி லட்சுமி மற்றும் எதிர்தரப்பினர் என இரு தரப்பும் மாறி, மாறி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நடிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நடிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்த புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் துனை நடிகையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வீட்டின் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாண்டிலட்சுமி மீது புகார்

பாண்டிலட்சுமி மீது புகார்

இந்த பகுதியில் பொதுமக்கள் யாராவது சிறிதுநேரம் நின்றாலோ அல்லது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி பேசினாலோ செல்போனில் படம் பிடித்து போலீசாரிடம் நடிகை பாண்டி லட்சுமி புகார் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடிகையால் பெரும் சிரமம்

நடிகையால் பெரும் சிரமம்

மேலும் கடை வைத்திருப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் அவரால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஆர்ப்பாட்டம்

திடீரென ஆர்ப்பாட்டம்

போலீசார் இதுகுறித்து துணை நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். துணை நடிகைக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் பரபரப்பு

அப்பகுதியில் பரபரப்பு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

More from Filmibeat

Read more about: actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X