திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்.. காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார்!
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் காதல் சுகுமார் மீது, துணை நடிகை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமான நடிகர் தான் காதல் சுகுமார். பரத் நடித்த காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் சுகுமார். தனது பெயரோடு படத்தின் பெயரை சேர்த்துக்கொண்டு காதல் சுகுமார் என அழைக்கப்பட்டார். இவர் பார்ப்பதற்கு வடிவேலு போல இருந்ததால், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. கமலுடன் விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படத்தில் நடித்தார்.

நடிகர் காதல் சுகுமார்: நடிகராக இருந்த சுகுமார், திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து, கிட்டதட்ட 10 ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதையடுத்து அண்மையில் கவின் நடித்த ஸ்டார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.
ஹீரோவாக: ஸ்டார் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரியான காதல் சுகுமார், தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டப்பாங்குத்து திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து 'வெற்றி வேலப்பர்' எனும் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏமாற்றி விட்டார்: இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் காதல் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடபழனியில் வசித்து வரும் அந்த துணை நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருக்கும்நிலையில், சுகுமாருடன் பழகி உள்ளார். இருவரும் கடந்தசில ஆண்டுகளாக பழகிவந்த நிலையில்,தற்போது ஏற்கனவே எனக்கு திருமணமாகிவிட்டது என்று கூறி, தன்னை திருமணம்செய்யாமல் ஏமாற்றுவாக அந்தபுகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காதல் சுகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











