தாங்க முடியல.. தற்கொலைக்கு முன் சகோதரியிடம் வீடியோ காலில் கதறிய நடிகை.. திடுக்கிடும் தகவல்!

சென்னை: இளம் நடிகை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Psycho Actress Srinika Shocking tiktok | Young Actress Padmaja passed Away

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பத்மஜா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூருக்கு வந்துள்ளார். பத்மஜாவின் கணவர் பெயர் பவன்.

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் இருக்கிறான்.

உறவினர் வீட்டில் குழந்தை

உறவினர் வீட்டில் குழந்தை

சினிமாவிலும் விளம்பர படங்களிலும் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார் பத்மஜா. இதனிடைய கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. பத்மஜாவுக்கு ஆண் நண்பர்களின் பழக்கம் அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் தங்களது இரண்டு வயது குழந்தையை கூட உறவினர் வீட்டில் விட்டு வளர்த்துள்ளனர்.

உறவுக்கார இளைஞர்

உறவுக்கார இளைஞர்

வாரா வாரம் இறுதியில் மட்டும் இருவரும் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்துள்ளனர். மேலும், தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சென்ற மாதம் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து உள்ளார் பத்மஜா. கணவர் பிரிந்து சென்றதால் உறவுக்கார இளைஞர் ஒருவருடன் வசித்து வந்துள்ளார் பத்மஜா.

ஜன்னல் வழியாக

ஜன்னல் வழியாக

பத்மஜா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருவொற்றியூருக்கு வந்து உள்ளார். இவரது வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக லைட்டுகள் எதுவும் அணைக்கப்படாமல் இருந்துள்ளது. வீட்டின் கதவும் மூடியப்படியே இருந்துள்ளது. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர் சந்தேகத்துடன் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

அப்போது நடிகை பத்மஜா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக திருவெற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து பத்மஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போனை கைப்பற்றி..

செல்போனை கைப்பற்றி..

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் காரணமாக பத்மஜா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பத்மஜாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

அதில் நடிகை பத்மஜா தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவை பெங்களூரில் உள்ள தன்னுடைய சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தன்னுடைய சகோதரிக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது கடன் பிரச்சனையால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளார்.

இளைஞருக்கு வலை

இளைஞருக்கு வலை

இதனிடையே பத்மஜாவுடன் வசித்து வந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திடீரென ஏன் அவர் மாயமானார், அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை நடந்ததா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பத்மஜா தற்கொலைக்கு பின் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X