என் மாமனார் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.. அண்ணாத்த பட துணை நடிகை சிவரஞ்சனா பரபரப்பு புகார்!
சென்னை: அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்த சிவரஞ்சனா தனது மாமனார் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
மாமனார் மற்றும் மாமியார் மீது பாலியல் தொல்லை மற்றும் கொடூரமாக தாக்கியதாக புகார் அளித்துள்ளார் சிவரஞ்சனா.
துணை நடிகை சிவரஞ்சனா தனது மாமனார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தட்டிக் கேட்டபோது உருட்டுக் கட்டையால் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

துணை நடிகை ரஞ்சனா
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை சிவரஞ்சனா. எருகம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். மனநலம் சரியில்லாதவரை இவருக்கு ஏமாற்றி திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், தான் நடிகையாக இருப்பதால், தொடர்ந்து தனது மாமனார் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார் சிவரஞ்சனா.

அத்துமீறிய மாமனார்
இதுதொடர்பாக பேசிய சிவரஞ்சனா தனது மாமனார் சரவணவேல், நான் ஒரு நடிகையாக இருப்பதால், எதையும் அட்ஜெஸ்ட் செய்து போவேன் என நினைத்து மறைமுகமாக பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சில நேரங்களில் அவர் எல்லை மீறிய நிலையில், நான் அவரை தட்டிக் கேட்டேன். ஆனால், என்னை உருட்டுக் கட்டையால் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து தாக்கியதில் எனக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன என பகீர் கிளப்பி உள்ளார்.

போலீஸில் புகார்
மாமனார் மற்றும் மாமியார் தன்னை அடித்து துன்புறுத்தியதில் காயம் ஏற்பட்டுள்ளது என முகத்தில் காயத்துடன் போலீஸில் துணை நடிகை சிவரஞ்சனா புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியது. வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்த வந்த நாத்தனார் ஆரத்தியும் இதில் தொடர்பு எனக் ரஞ்சனா கூறியுள்ளார்.

தலைமறைவு
இவ்வளவு பிரச்சனை நடந்த பின்னரும் இந்த வீட்டில் ஏன் இருக்கீங்கன்னு கேட்கிறாங்க, நான் எந்தவொரு தப்பும் பண்ணல, நான் ஏன் போகணும், பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வேன். தலைமறைவாகி விட்ட என் மாமனாரை காவல் துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டேன் என சிவரஞ்சனி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











