அதிர்ச்சி.. பவதாரிணியை தொடர்ந்து புற்றுநோய்க்கு பலியான நடிகை விஜயகுமாரி.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரையில் துணை நடிகையாக வலம் வந்த விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்புக் காரணமாக சென்னையில் இன்று காலமானார். மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புகள் தொடர்ந்து திரைத்துறையில் இருந்து பலரை காவு வாங்கி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி தனக்கு புற்றுநோய் இருப்பதே கடைசி வரை தெரியாத நிலையில், புற்றுநோய் பாதிப்பால் உடல்நலம் குன்றி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகைகள் மனிஷா கொய்ராலா மற்றும் மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பிரபல நடிகைகள் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி பெரிய போராட்டத்தை நடத்தி அதில் இருந்து மீண்டு வந்தனர்.
விஜயகுமாரி காலமானார்: சென்னை, வளசரவாக்கத்தில் வசித்து வந்த துணை நடிகை விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போராடி வந்தார். ஆனால், கடைசி வரை அவருக்கு சரியான சிகிச்சை அளிக்க யாருமே உதவ முன் வராத நிலையில், பரிதாபமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தியை கேட்ட அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உயிரை பறித்த கேன்சர்: வாழ்வே மாயம், தேவதாஸ் போன்ற படங்களில் புற்றுநோயால் ஹீரோ இறப்பது போல சினிமாவில் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். ஆனால், நிஜ வாழ்வில் பல சினிமா பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பெரும் துயரங்களும் அரங்கேறி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், புற்றுநோய் சினிமாவில் சாதிக்கத் துடித்து வந்த விஜயகுமாரியையும் தற்போது பறித்து சென்று விட்டது.
சினிமா பிரபலங்கள் இரங்கல்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி சில படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். புற்றுநோய் பாதிப்புக்காக கேபிஒய் பாலாவிடம் எல்லாம் உதவி கேட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவருடன் நெருங்கி பணியாற்றிய சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











