நள்ளிரவில் கதவை தட்டிய மர்ம நபர்.. கத்திமுனையில் துணை நடிகை பாலியல் பலாத்காரம்.. 2 பேர் கைது!
சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்த மர்மநபர்கள் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர்.
சினிமாவில் தான் இதுபோன்ற சம்பவங்களை நாம் பார்த்து வாயடைந்து போய் இருப்போம்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னையில் இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகை
சென்னை, வளசரவாக்கம், ஏ.கே.ஆர் பகுதியில் துணை நடிகை வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், நேற்று இரவு 11.30 மணி அளவில் கதவை தட்டிஉள்ளனர். துணை நடிகை கதவை திறந்த நேரத்தில் அவரது கழுத்தில் கத்தியை மிரட்டி வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டனர்.

பாலியல் பலாத்காரம்
பின் அந்த துணை நடிகையை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து மற்றொரு இளைஞன் வீட்டிற்குள் நுழைந்து அவர் அணிந்திருந்த கம்பல் மற்றும் செயின், மோதிரத்தையும், பீரோவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் காட்டி மிரட்டி வாங்கி உள்ளார்.

நிர்வாண வீடியோ
மேலும், பலாத்காரம் செய்த இளைஞர் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடந்ததை வெளியில் சொன்னால், இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்து அங்கிருந்து இந்த இரண்டு இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

இருவர் கைது
இது குறித்து, துணை நடிகை விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் இருவர் பைக்கில் வந்ததை கண்டுபிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அப்பகுதியில் இரும்பு கடையில் வேலை பார்க்கும் செல்வக்குமாரும் குற்றச் சம்பவத்துக்கு உறுதுணையாக இருந்த ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணதாசனையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள், கத்தி, செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications











