»   »  நடிகர் கிருஷ்ணாவின் மனைவி உண்மையிலேயே கொடுமைக்காரரா? இணையத்தில் பெரும் ஆதரவு!

நடிகர் கிருஷ்ணாவின் மனைவி உண்மையிலேயே கொடுமைக்காரரா? இணையத்தில் பெரும் ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கிருஷ்ணா தன் மனைவி ஹேமலதா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ரத்தக் காயம் ஏற்படுமளவுக்கு தாக்கிதாகவும் கூறி விவாகரத்து கோரியுள்ளார் அல்லவா?

ஆனால் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறி, இணையத்தில் ஹேமலதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Supporting voice for Actor Krishna's wife Hemalatha

குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஹேமலதாவின் ஆசிரியர் ஒருவர் எழுதியுள்ள பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பதிவு:

எஸ் என் எஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இருந்தபோது என்னுடைய மாணவி கைவல்யா என்றழைக்கப்படுகிற ஹேமலதா. கணிப்பொறிப் பயன்பாட்டியலில் பொறியியல் பட்டம் பெற்ற எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்.

அவ்வப்போது ஏழைக் குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்டோர் இல்லங்களுக்குச் சென்று உதவும் மனப்பன்மை கொண்டவர்.

அப்படி ஏதோ ஒரு பொதுநிகழ்வில் அவரைக் கண்ட கழுகு மற்று வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா எனும் நடிகர் ஹேமலதாவைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியிருக்கிறார். பெரியவர்கள் ஏற்பாட்டில் கோலாகலமாகத் திருமணமும் நடந்தது. நானும் குடும்பத்துடன் அத் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

ஆனால் திடுமென்று ஒரு செய்தி இப்போது செய்தித் தாளில் படித்து அதிர்ந்தேன். கைவல்யா தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கிருஷ்ணா சொல்வதாகவும் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் வந்த செய்தி அது.

ஆதரவற்றோருக்கு தனது சம்பளத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து உதவி, அவர்களின் மேல் அன்பு செலுத்திவரும் நல்ல பெண் அவர் என்பதை நானறிவேன். என்னையும் அவரையும் தெரிந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அறிவார்கள்.

கைவல்யாவை மிகவும் அறிந்தவன் என்பதால் உறுதியாகச் சொல்கிறேன், கைவல்யா (எ) ஹேமலதா மீது அவதூறாகப் பரப்பப்படும் செய்தி முழுக்க முழுக்க சதியே.

மீடியாவும் அரசியலும் பணமுள்ள பக்கமே பாயும் என்பதால் நம்மால் முடிந்தவரை அவருக்கு நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைக்க உதவுவோம்.
நான் கைவல்யா எனும் ஹேமலதா என்ற அன்பு மாணவிக்கு ஆதரவளித்தும் புகழ் மற்றும் பணபலம் நோக்கும் ஊடகத்தின் தன்மையை எதிர்த்தும் கையை உயர்த்துகிறேன்....
நீங்கள்?
பகிருங்கள்.... முடிந்தவரை
நான் கொடுத்துள்ள (கருமையில் I support Kaivalya) படத்தை ஓருசில நாட்கள் அடையாளப் படமாக வைத்துதவுங்கள், மனமிருந்தால்!"

-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

English summary
A college professor from Coimbatore has raised voice to support Hemalatha, wife of actor Krishna. Remember, the later is seeking divorce from Hemalatha a few days back.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil