twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவர் எது சொன்னாலும் அது நாட்டுக்கு நல்லதாதான்யா இருக்கும்.. வரிந்து கட்டும் ரஜினி ரசிகர்கள்!

    |

    சென்னை: குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும் ஒன்றாக எழுந்துள்ளது.

    குடியுரிமைய சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பல மாநிலங்கள் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசபாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

    குடியுரிமை சட்டத் திருத்தம்.. நச்சென ஒரே ஒரு போட்டோ போட்ட அமலாபால்.. பாராட்டும் நெட்டிசன்கள்!குடியுரிமை சட்டத் திருத்தம்.. நச்சென ஒரே ஒரு போட்டோ போட்ட அமலாபால்.. பாராட்டும் நெட்டிசன்கள்!

    ஹேஷ்டேகுகள் ட்ரென்ட்

    ஹேஷ்டேகுகள் ட்ரென்ட்

    ரஜினியின் இந்த கருத்துக்கு வரவேற்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் #IStandWithRajinikanth, #ShameOnYouSanghiRajini ஆகிய இரண்டு ஹேஷ்டேகுகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

    இவருக்கு மட்டும்தான்

    ரஜினிகாந்த் எது சொன்னாலும் அது நாட்டு நலனுக்கும் அவரவர் வீட்டு நலனுக்கும் ஏற்றதாக தான் இருக்கும். துணிச்சலாக எந்த கருத்தையும் சொல்லும் தைரியம் இவருக்கு மட்டும் தான் உண்டு

    மக்களை காக்கனும்

    வன்முறை வேண்டானு சொல்ற மனுசன எதிர்க்குற உங்க மனநிலை எல்லாம் எப்டி இருக்கும்.. உங்கள மாதிரியானவங்க கையிலிருந்து மக்களை காக்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    எதற்கும் தீர்வு ஆகாது..

    சுதந்திரத்தை அஹிம்சையில் வாங்குன நாடுயா இது...வன்முறை எப்பொழுதும், எதற்கும் தீர்வு ஆகாது.. என்கிறார் இந்த நெட்டிசன்.

    வாய்ப்பிருக்கிறதா?

    இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் நபர்கள் இங்கு இல்லை என்று நிரூபிக்க முடியுமா?
    இல்லை என்றால்
    இத்தகைய போராட்டங்கள் அவர்களுடைய இலட்சத்தியத்தை அடைய உதவியாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?
    வேண்டுமா இத்தகைய போராட்டங்கள்? என்றுகிறார் நெட்டிசன்.

    ஆண்டவன் அருள்

    அவர் வெள்ளை. வெள்ளையில் கருப்பும் உண்டு, காவியும் உண்டு, நீலமும் உண்டு, சிவப்பும் உண்டு! அவர் கருத்துக்கள் "ஈயம்" போல் உள்ளதென எண்ணினால் மாறவேண்டியது அவரல்ல- நீங்கள் தான். ஆண்டவன் அருள் ரஜினிகாந்துக்கு எப்போதும் உண்டு! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    வன்முறையின்றி..

    ஒரு முடிவை எடுத்து அதை பின்பற்ற சொன்னால்..அவன் சர்வாதிகாரி
    மக்களை சுய அறிவோட செயல்பட வைத்து சரி தவறை சுட்டிகாட்டி வழிநடத்துபவனே தலைவன்..
    ரஜினி #CAA சம்பந்தபட்ட முடிவை மக்களிடமே விட்டுவிட்டார்..ஆனால் போராட்டத்தை வன்முறையின்றி விழிப்புணர்வோடு செய்யசொல்கிறார் என்று கூறுகிறார்.

    நாட்டைவிட்டு செல்லுங்கள்

    ரஜினிக்கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. நீங்கதான் உண்மையான தேச விரோதி.. ஜல்லிக்கட்டு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் இதே மனநிலையில்தான் இருந்தீர்கள். தமிழ்நாட்டைவிட்டு செல்லுங்கள்.. என்கிறார் இவர்.

    போராடி கொண்டிருக்கிறோம்..

    அந்த ஒற்றுமைக்காக தான் போராடி கொண்டிருக்கிறோம் சங்கி அவர்களே..! என்று கூறுகிறார் இவர்.

    வாங்கிக்கட்டிக்குறியே தெய்வம்

    வருட கடைசில இப்படி வாங்கி கட்டிக்குறியே தெய்வமே என்று கூறுகிறார் இவர்.

    கமல் டிடிவிதான் போல

    அரசியல்ல இதுவரை அதிக ட்ரோல்ஸ் ஆகாத நபர்கள்னா கமல் & டிடிவி தான் போல என்கிறார் இவர்.

    சமூக விரோதிகள்

    இந்த ரஜினிகாந்த் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியில் வாழ்ந்திருந்தால்-ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி இப்படிதான் சொல்லியிருப்பார்- "கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே காரணம்-ஜெனரல் டையர் அவரது கடமையை செய்தார்- இருப்பினும் என் மனதிற்கு வேதனையாகவே உள்ளது" என்கிறார் இந்த நெட்டிசன்.

    ஓட விடக்கூடாது..

    மொத்தத்தில் மண்ணின் மைந்தர்களை அடிமையாக்குவதே மோடி ரஜினி போன்றோர்களின் திட்டம் மராட்டியன் படத்தையும் இனி ஓட விடக்கூடாது.. என்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    #IStandWithRajinikanth, #ShameOnYouSanghiRajini hashtags are trending Rajinikanth. supports and opposing has raised for Rajinikanth Statement on CAB.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X