70 வயதிலும் ஹேண்ட்சம் லுக்..குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய சரத்குமார்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்ரீம் ஸ்டார், சூப்பர் ஹீரோ என பல பட்டங்களை வகித்து வந்த நடிகர் சரத்குமார் தற்போது ஹீரோ என்பதை தாண்டி ஒரு கேரக்டர் நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். 70வது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை சரத்குமார் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வில்லன், ஹீரோ, குணசித்திர கதாபாத்திரம் என் எந்த கேரக்டர் கொடுத்தாலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டலை பெறுவார் நடிகர் சரத்குமார். இவர்1986 ஆம் ஆண்டு சமாஜம்லோ மூலம் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதையடுத்து, தமிழில் நடிகர் கார்த்திக்குடன் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, விஜயகாந்த்துடன் சேர்ந்து புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்தார். அந்த திரைப்படம் இவரது வாழ்க்கை பயணத்தையே மாற்றியது.

ஹிட் படங்கள்: இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த சரத்குமார் பின் ஹீரோவாக மாறி பெண்ணின் மனதைத் தொட்டு, சூர்யவம்சம், நாட்டாமை, சிம்மராசி, மாயி, விண்ணுக்கும் மண்ணுக்கும் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகர்களில் ஒருவராக மாறினார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக, ஐஸ்வர்யா ராயின் கணவராக நடித்து 2கே கிட்ஸ்களுக்கும் பிடித்த நடிகராக மாறி உள்ளார்.
70வது பிறந்த நாள்: இந்நிலையில் நடிகர் சரத்குமாரின 70வது பிறந்த நாள் ஜூலை 14ந் தேதி கொண்டாடப்பட்டது. வீட்டில் எளிமையாக நடைபெற்ற இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராதிகா சரத்குமார், அவரின் மகள் ராயன் மித்துடன், ராகுல், வரலட்சுமி, பூஜா, வரலட்சுமியின் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ் மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவரும் கலந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோவை சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், சரத்குமாருக்கு 70 வயசா நம்பவே முடியலையே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
காதல் திருமணம்: நடிகர் சரத்குமார் சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வரலட்சுமி, பூஜா என்கிற இரண்டு மகள்கள் இருக்கும், நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து,2001ம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமார் தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். கடந்த வாரம் நடந்த வரலட்சுமியின் திருமணத்தில் அனைவரும் எந்தவிதமான மனகசப்பும் இல்லாமல் கலந்து கொண்டனர். வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











