twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏழாம் அறிவு வரிவிலக்கு விவகாரம்: உதயநிதி மனுவை அனுமதித்தது உச்சநீதிமன்றம்

    By Shankar
    |

    கேளிக்கை வரிவிலக்கு விவகாரத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்துள்ளது.

    உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த "ஏழாம் அறிவு" திரைப்படத்துக்கு வேண்டுமென்றே அரசியல் உள் நோக்கத்தோடு காலதாமதமாக கேளிக்கை வரிவிலக்கு வழங்கி, வரிவிலக்கின் பயன் அவர்களுக்கு கிடைக்க விடாமல் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    Supreme Court admits Udhayanithi's petition

    மேலும், அந்தப் படத்துக்குப் பின்னர் விண்ணப்பித்த பல படங்களுக்கு உடனடியாக வரிவிலக்கு வழங்கி பாரபட்சமாக நடந்து கொண்டதாலும், கேளிக்கை வரிவிலக்கு வழங்க பரிந்துரை செய்யும் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி அரசாணைகளில் குறிப்பிடப்படாததாலும், கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசின் வணிக வரித்துறையால் கொண்டுவரப்பட்ட அரசாணைகளை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    ஒரு படத்துக்கு எவ்வளவு நாட்களில் கேளிக்கை வரிவிலக்கு வழங்கி ஆணையிட வேண்டும் என்று விதிகள் எதுவும் இல்லாத நிலையில், காலநிர்ணயம் செய்து சட்டத்திருத்தம் செய்ய உத்தரவிட முடியாது என்றும், கேளிக்கைவரி விலக்கு வழங்கும் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் திரைப்படத் துறையின் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாரபட்சமாக நடந்து கொள்வார்கள் என்று கூற இயலாது என்றும் கூறி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தாக்கல் செய்த மனு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்று கூறி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்து, எதிர்மனுதார்கள் 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    தமிழில் பெயர் வைத்த படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று அரசாணை கூறியுள்ளபோதிலும், அதற்கு எதிராக பாரபட்சமாக செயல்பட்டு "சைக்கிள் கம்பெனி", "ரம்மி" போன்ற பிற மொழிகளில் பெயரிடப்பட்ட படங்களுக்கும் விதிமுறைகளை மீறி வரிவிலக்கு வழங்குமாறு பரிந்துரை செய்ததால் கேளிக்கை வரி விலக்கு குழு உறுப்பினர்கள் பாபு, வி.எஸ். ராகவன், ராஜஸ்ரீ, எல்.ஆர். ஈஸ்வரி, சங்கர் கணேஷ், ஏ.எல். ராகவன், எம். என். ராஜம் ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Supreme Court has admitted the petition of Udhayanithi Stalin regarding the entertainment tax issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X