twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல நடிகை பலாத்கார வழக்கு... நடிகர் திலீப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த தடை

    By
    |

    டெல்லி: நடிகை பலாத்கார வழக்கில், நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    சிறப்பு விசாரணை

    சிறப்பு விசாரணை

    இந்த வழக்கின் சிறப்பு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வீடியோ காட்சி

    வீடியோ காட்சி

    அதோடு பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சியின் உண்மை தன்மையை, சண்டிகரில் பரிசோதிக்கும் படியும் அது உத்தரவிட்டது.

    உண்மைத் தன்மை

    உண்மைத் தன்மை

    இந்நிலையில், அந்த உண்மைத் தன்மை சோதனை அறிக்கை கிடைக்கும் வரையில், சிறப்பு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடிகர் திலீப் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

    ஏற்க மறுப்பு

    ஏற்க மறுப்பு

    இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இந்த அறிக்கை கிடைக்கும் வரையில் அவரிடம் மட்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டாம் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

    English summary
    The Supreme Court refused to stay the trial against Malayalam actor Dileep in a case of abduction and molestation of a actress in which he is one of the accused.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X