Sarathkumar : ருத்ரன் படத்திற்காக சரத்குமார் வாங்கிய சம்பளம்?

சென்னை : ராகவா லாரன்ஸ் லீட் ரோலில் நடித்துள்ள ருத்ரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள சரத்குமார் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார். நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனராகவும் உள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான பெரிய பழுவேட்டரையர் ககதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

supreme star sarathkumar salary for raghava lawrence rudhran movie

பொன்னியின் செல்வன் : அமரர் கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது. வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்தனர். இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் கவர்ந்த கணவராக நடித்திருந்தார் சரத்குமார்.

பெரிய பழுவேட்டரையர் : பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கிய கதாபாத்திரமாக வரும் இவர், காலம்காலமாக சோழ மன்னர்களுக்கு பணியாற்றி, போரில் சோழ மன்னர்களுக்கு உதவி புரிந்து, சோழ தேசத்தைக் காத்து வரும் பழுவேட்டரையர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார். 24 போர்களில் கலந்து கொண்டு 64 விழுப்புண்கள் பெற்ற வீரராக அறியப்பட்ட வீராக ஆதித்த கரிகாலனுக்கு நிகராகக் கருதப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்த சரத்குமாருக்கு இந்த படத்தின் மூலம் படவாய்ப்பு அதிகரித்து சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

supreme star sarathkumar salary for raghava lawrence rudhran movie

ருத்ரன் படத்தில் : ராகவா லாரன்ஸ் நடிப்பில் புத்தாண்டை முன்னிட்டு ருத்ரன் படம் திரையரங்கில் வெளியானது. இப்படத்தில், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்,நாசர், சரத்குமார் நடித்துள்ளார். கலவையான விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படத்திற்கு பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்

சரத்குமார் சம்பளம் : மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு ருத்ரன் படத்தில் சரத்குமார் பூமி என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தற்காக நடிகர் சரத்குமார் ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X