வீர தீர சூரன்.. விக்ரம்தான் எனது மேக்கப் மேன்.. மாஸ் காட்டிய மலையாள நடிகர்.. செம ஜாலியான் ஆள் ப்பா
சென்னை: விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மார்ச் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. விக்ரமுக்கு இந்தப் படம் கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் ஹிட்டை கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன.
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல கஷ்டங்களை கடந்து இன்று ஒரு நிலையான இடத்துக்கு வந்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதுவாகவே எளிதாக மாறிவிடக்கூடிய அவர் பிதாமகன் படத்துக்காக தேசிய விருதினையும் வென்றார். அதேபோல் தில், தூள், சாமி, ஜெமினி என கமர்ஷியல் ரீதியாக மெகா ஹிட் படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். முக்கியமாக மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விக்ரமுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அப்படி 99 சதவீதம் யாரிடமும் வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்பவர் அவர்.

தங்கலான் விக்ரம்: ஆனால் விக்ரம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அவருக்கு கடந்த சில வருடங்களாக கமர்ஷியலாக ஒரு ஹிட் கிடைக்கவில்லை. அவரும் ஸ்கெட்ச், இருமுகன் என கமர்ஷியல் படங்களிலும் பொன்னியின் செல்வன், தங்கலான் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களிலும் நடித்து பார்த்துவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் மிகப்பெரிய வெற்றி இன்றுவரை அவருக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார்கள்.
வீர தீர சூரன்: இப்படிப்பட்ட சூழலில் சித்தா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அருண்குமாருடன் இணைந்திருக்கிறார். படத்துக்கு வீர தீர சூரன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசரை பார்க்கையில் கண்டிப்பாக இது சியான் விக்ரமுக்கு ஒரு கமர்ஷியல் சக்சஸை கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். படமானது மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ப்ரோமோஷன் பணிகள் தீவிரம்: படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதன் காரணமாக ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் விக்ரம், அருண் குமார், துஷாரா விஜய், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய சுராஜ், "நான் ஒரு நடிகரோடு முதன்முறையாக புகைப்படம் எடுத்துக்கொண்டது என்றால் அது விக்ரமோடுதான். 2005ஆம் ஆண்டு மஜா படத்தின்போது சிங்கப்பூரில் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய ரசிகர் என்று சொன்னார். அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பிறகு அவரிடம் சார் உங்களுடன் ஒரு ஃபோட்டோ என்று சொல்லி எடுத்துக்கொண்டேன்.

எல்லோரும் மிலிட்டரி நான் மிமிக்ரி: எனது வீட்டில் என்னுடைய அப்பாவும், அண்ணனும் மிலிட்டரி. நான் மட்டும்தான் மிமிக்ரி. ஒருமுறை விபத்தில் சிக்கி எனது கை உடைந்துவிட்டது. எனவே சினிமா கனவு அவ்வளவுதான் என்று இருந்தது. ஆனால் அந்த சமயத்தில்தான் விக்ரமின் பேட்டிகளை எல்லாம் பார்த்தேன். அவரால் நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொன்னாலும்; தன்னுடைய விடாமுயற்சியால் இன்று ஒரு நடிகராக எங்கேயோ அவர் சென்றுவிட்டார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
எனக்கு மேக்கப் மேன் விக்ரம்: வீர தீர சூரன் செட்டில் விக்ரம் ஈகோ இல்லாமல் பழகினார். அவர் செட்டுக்குள் வந்தால் எல்லோரும் தேனீக்கள் போல் அவரை மொய்த்து பேசுவார்கள். யாராவது அருகில் வராவிட்டால் இவர் அவரை அழைத்து பேசுவார். அதெல்லாம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தன. அதேபோல் விக்ரமுக்கு மும்பையிலிருந்து மேக்கப் மேன் வந்திருந்தார். எனக்கு விக்ரம்தான் மேக்கப் மேன். அந்த அளவுக்கு அவர் எல்லோரின் மீதும் அக்கறை எடுத்துக்கொள்வார்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் சுராஜ் இவ்வளவு ஜாலியான ஆளா இருக்காரே என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications