தீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்
Recommended Video

ஹைதராபாத்: சிவகார்த்திகேயன், அமலா பால் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் தெலுங்கு நடிகையான சுரேகா வாணி. அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன்
காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலா பால் அம்மாவாகவும், எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாகவும், விஜய்யின் மெர்சல் படத்தில் நர்ஸாகவும் நடித்துள்ளார் சுரேகா.

சுரேகா வாணி
படங்களில் குடும்பத்து குத்து விளக்காக நடித்து வரும் சுரேகா வாணி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி தெலுங்கு திரையுலக ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நீயாம்மா?
படங்களில் சேலை அணிந்து அடக்கமாக வரும் நீங்களாம்மா இப்படி நீச்சல் உடையில் இருக்கிறீர்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று டோலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுரேகாவை விளாசியுள்ளனர்.

வீடியோ
முன்னதாக சுரேகா வாணி தன் வீட்டில் குட்டியோண்டு டிரவுசர் போட்டு மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியானபோது தான் ரசிகர்கள் உண்மையில் பேரதிர்ச்சி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











