1500 கோடி சொத்துக்காகத்தான் இரண்டாவது திருமணம்.. 44 வயது நடிகையின் முன்னாள் கணவர் ஓபன் டாக்
சென்னை: தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது உறவினர்தான் நரேஷ் பாபு. ஏற்கனவே நரேஷ் மூன்று முறை திருமணம் செய்தவர். ஆனால் அந்த மூன்று திருமண வாழ்க்கையுமே பாதியில் முடிவடைந்தன. இதனையடுத்து நான்காவதாக அவர் நடிகை பவித்ராவை திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் இவர்களது திருமணம் நடைபெற்றது. பவித்ராவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்தச் சூழலில் பவித்ரா குறித்து அவரது முன்னாள் கணவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது சகோதரர் நரேஷ் பாபு. நரேஷ் பாபுவும் ஒரு நடிகர்தான். தெலுங்கு மொழியில் பல படங்களிலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். நரேஷ் பாபு முதல்முதலாக மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார். ஆனால் இவரையும் விவாகரத்து செய்தார் நரேஷ் பாபு.

மூன்றாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது 50ஆவது வயதில் மூன்றாவது திருமணம் செய்ய முடிவெடுத்து ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நரேஷ் பாபுவைவிட 20 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யாவுக்கும், நரேஷுக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்தார்.
நான்காவது திருமணம்: கன்னட நடிகையான பவித்ரா லோகேஷை காதலிப்பதாக நரேஷ் பாபு அறிவித்தார். மேலும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் லிவிங் டூகெதராகவும் அவர்கள் வசித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது. அதனை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் புத்தாண்டன்று முத்தம் கொடுத்தபடி வீடியோவையும் இரண்டு பேரும் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து கடந்த வருடம் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். பவித்ராவும் எற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
பவித்ராவின் முன்னாள் கணவர்: பவித்ரா ஏற்கனவே கன்னட நடிகர் சுரேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். மேலும் கூலிப்படையை வைத்து தன்னை கொலை செய்ய பவித்ரா லோகேஷ் முயற்சி செய்ததாகவும் கடந்த வருடம் சுரேந்திர பிரசாத் ஒரு பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார் என்பது நினைவுகூரத்தக்கது.
எல்லாம் சொத்துக்காகத்தான்: இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பவித்ரா எப்போதுமே ஆடம்பர வாழ்க்கையை ரொம்பவே விரும்புபவர். அதனால்தான் அவர் நரேஷ் பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். நரேஷ் பாபுவிடம் சுமார் 1,500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இதனால்தான் அவருக்கு நான்காவது மனைவியாக பவித்ரா சம்மதம் சொல்லி திருமணமும் செய்துகொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











