For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரிஸ்மா ஃபேஷன் போட்டியில் ஜெயிச்சது யார் தெரியுமா? பாலாவும் ஷிவானியும் புரமோ பீஸுங்க மட்டுந்தானா?

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி மாச்சோ பாட்டுக்கு டான்ஸ் ஆடுன மாதிரி புரமோ கட் பண்ணிட்டு, எல்லா போட்டியாளரையும் கலாசலா பாட்டுக்கு ஆட வச்சி மறுபடியும் ஏமாத்திட்டாங்களே..

  பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்த இன்ட்ரஸ்ட்டிங் சம்பவங்கள் | டாப் ஃபைவ் பீட்ஸ் - வீடியோ

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரதாரரான பிரிஸ்மா நிறுவனத்தின் சார்பில் ஃபேஷன் ஷோ போட்டி நடைபெற்றது.

  பாலாஜியையும் ஷிவானியையும் புரமோவில் ஹைலைட் பண்ணிட்டு, கடைசியா டைட்டில் அந்த ஜோடிக்கு கொடுத்துட்டாங்களே!

  4வது புரமோ

  4வது புரமோ

  என்னடா திடீர்னு 4வது புரமோலாம் விஜய் டிவில போடுறீங்களேன்னு ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டாங்க.. அந்த அளவுக்கு ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் செம பிராக்டிஸ் பண்ணிட்டு டான்ஸ் ஆடுவது போல புரமோ காட்டுனாங்க, வர வர புரமோ மட்டும் தான் நல்லா இருக்கு என ரசிகர்களை தாண்டி சம்யுக்தாவே ஒரு நாள் சொல்லப் போறாங்க..

  ஃபேஷன் ஷோ

  ஃபேஷன் ஷோ

  பிரிஸ்மா சார்பாக நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு, பிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்தும், நடனம் ஆடியும் நிகழ்ச்சியை கலர்ஃபுல் ஆக்கினர். ஏகப்பட்ட ஜோடி மாற்றங்களும் அர்ச்சனாவின் வரவுக்கு பிறகு நடந்திருந்தது.

  கலாசலா

  கலாசலா

  புரமோவில் மெர்சல் பாட்டான மாச்சோ பாட்டை போட்டுவிட்டு, நிகழ்ச்சியில் சிம்பு பாடலான கலாசலாவை ஓடவிட்டு எல்லா போட்டியாளர்களையும் நடக்கவிட்டும், ஆடவிட்டும் நொடிப் பொழுதில் அந்த டாஸ்க்கை அனிதா சொல்வது போல எடிட் பண்ணி சட்டென போட்டு முடித்து விட்டார்கள்.

  பாலாஜி ஷிவானிக்கு பல்பு

  பாலாஜி ஷிவானிக்கு பல்பு

  புரமோவில் காட்டியதை பார்த்தால் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் தான் பட்டம் கொடுப்பாங்கன்னு பார்த்தால், அவங்களுக்கு பெரிய பல்பை மாட்டி விட்டார் பிக் பாஸ் எடிட்டர். பாவம் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு பிக் பாஸ் எடிட்டர் ரசிகர்களை நிகழ்ச்சியை பார்க்க வைக்க ரொம்பவே சிரமப்படுகிறார்.

  வின்னர் யார்?

  வின்னர் யார்?

  அர்ச்சனா அக்கா வந்த பிறகு அடங்கிப் போன சுரேஷ் தாத்தா, இந்த முறை அப்பா மகள் கான்செப்டில் அர்ச்சனாவுடன் இணைந்து அந்த ஆட்டம் போட்டார். போடுற பாட்டுக்கும், ஆடுன ஆட்டத்துக்கும், அப்பா பொண்ணு டாஸ்க்குக்கும் என்ன சம்பந்தம்னே தெரியாத நிலையில், அந்த ஜோடி தான் வின்னர் என அறிவித்து விட்டார்கள். தாத்தா டான்ஸ் செம!

  தீபாவளி பரிசு

  தீபாவளி பரிசு

  பிரிஸ்மா ஜெயித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்குமே பரிசுகளை வாரி வழங்கியது. அதற்கு பிறகு டிரெண்ட்ஸ் பிராண்டும் தீபாவளி பரிசுகளை வாரி வழங்கியது. பாவம் ரியோ ராஜ் இந்த படிக்கிற வேலையை மட்டும் தான் இப்ப செஞ்சிட்டு வருகிறார். அனிதாவையும் ஆரியையும் எந்த ஆட்டத்திலும் சேர்த்துக்காம கண்ணாடி ஜெயிலிலேயே அடைத்து வைத்து இறுதியா லைட் ஆஃப் பண்ணும் போது திறந்து விட்டாங்க!

  English summary
  Suresh Chakaravarthy and Archana won the Prisma best fashion pair contest and Trends gave the Diwali gifts to the Bigg Boss contestants.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X