கையெடுங்க.. சுரேஷை மிரட்டிய பாலாஜி.. சொர்க்கபுரி vs மாயபுரி ஜெயிக்கப் போவது யாரு? செம புரமோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 2வது புரமோவில் சொர்க்கபுரி ராஜ குடும்பத்துக்கும், மாயபுரி அரக்க குடும்பத்துக்கும் இடையே நடக்கும் யுத்தம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Day 15 Highlights | Nominations

அரசக் குடும்பத்தை அரக்கர்கள் வெறுப்பேத்துறது ரொம்ப நல்லா இருக்கு பிக் பாஸ், இப்பதான் இந்த சீசன் சூடு பிடிக்குது என இதுவரை அதை கலாய்த்தவர்களும் இந்த புரமோவை பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.

இன்னைக்கு மட்டுமில்ல இந்த வாரமே இந்த டாஸ்க்கால் சிறப்பான பல சம்பவங்கள் நடக்கும் என்பது உறுதி.

சொர்க்கபுரி ராஜ குடும்பம்

சொர்க்கபுரி ராஜ குடும்பம்

வேல்முருகன், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சோமசேகர், பாலாஜி முருகதாஸ் நிஷா, சனம் ஷெட்டி என சொர்க்கபுரி ராஜ குடும்பத்தில் செலக்ட் ஆன போட்டியாளர்கள், ஆடை ஆபரணங்கள் எல்லாம் அணிந்து கொண்டு பேரழகாக மேக்கப் போட்டு ரெடியாகி உள்ளனர். ரியோ ராஜ் இம்சை அரசனாக மாறி உள்ளார்.

மாயபுரி அரக்கர்கள்

மாயபுரி அரக்கர்கள்

சொர்க்கபுரி ராஜ்யத்திற்கு தொல்லைக் கொடுக்கும் மாயபுரி அரக்கர்கள் குடும்பத்தில், மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், அர்ச்சனா, கேபி, ஷிவானி நாராயணன், ஆரி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முதுகு வலிக்குது, உடம்பு வலிக்குதுன்னு சீன் போட்ட மொட்டை சுரேஷ், இந்த டாஸ்க்கில் வேற லெவல் எனர்ஜியில் மிரட்டுகிறார்.

பாவம் சோம்ஸ்

பாவம் சோம்ஸ்

இன்னைக்கு அரக்கர்கள் டீமின் அராஜகத்தில் இருந்து சொர்க்கபுரி அணியினர் எப்படித் தான் தப்பிக்க போகிறார்களோ தெரியவில்லை. அந்த அளவுக்கு இம்சை பண்ணுகின்றனர். அதிலும், சோமசேகரை தனியாக ஒரு இடத்திற்கு கூட்டிட்டுப் போய், அவரை கட்டி வைத்து, அவர் முகத்தில் கரியை பூசுவது எல்லாம் கொஞ்சம் டூமச்சாக இருந்தாலும், கேம் செமயா இருக்கு என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

கையெடுங்க.. சுரேஷை மிரட்டிய பாலாஜி

கையெடுங்க.. சுரேஷை மிரட்டிய பாலாஜி

என்னடா புரமோ செம ஜாலியா போய்கிட்டே இருக்கே, இன்னும் சண்டை ஏதும் காணலையே என பார்த்தால், கையெடுங்க.. என சுரேஷை பாலாஜி நேருக்கு நேர் முறைத்து மிரட்டும் அட்டகாசமான புரமோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கமெண்ட்டுகளை கொட்டி குவித்து வருகின்றனர்.

சிறப்பான சம்பவம்

சிறப்பான சம்பவம்

இருக்கு, இன்னைக்கு நிச்சயம் சிறப்பான சம்பவம் இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாம், இப்போதே அந்த நிகழ்ச்சியை பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் உள்ளனர். அனிதாவுக்கு அரக்கி வேடம் கொடுத்தை பார்த்த ரசிகர்கள், பொருத்தமாகத் தான் கொடுத்திருக்காங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X