பிக் பாஸ் வீட்டு அஷ்ட லக்ஷ்மிகள்.. எல்லாருக்கும் பெரிய கும்பிடு போட்ட மொட்டை பாஸ்.. அவங்கள மட்டும்?

சென்னை: பிக் பாஸ் வீட்டின் அஷ்ட லஷ்மிகள் என மிகப்பெரிய ஐஸை நம்ம மொட்டை தாத்தா சுரேஷ் சக்கரவர்த்தி பெண் போட்டியாளர்கள் தலையில் நல்லாவே தூக்கி வச்சிட்டார்.

விஜயதசமி ஸ்பெஷலாக 4 மணி நேரம் நீண்ட இழுவையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், ஏகப்பட்ட நல்ல விஷயங்களும் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்தது.

அதில், மிகவும் நல்ல விஷயம் என்றால், பெண் போட்டியாளர்கள் குறித்து ஆண் போட்டியாளர்கள் பேசியது தான்.

பில்லர் சம்யுக்தா

பில்லர் சம்யுக்தா

பாலாஜி முருகதாஸ், சோமசேகர், ஜித்தன் ரமேஷ் எல்லாம் பேசிவிட்டு, வேல்முருகன் பாட்டாவே பெண்களை போற்றி பாடிய பிறகு, நம்ம சுரேஷ் தாத்தா மேடை ஏறி பிக் பாஸ் வீட்டுப் பெண்கள் பற்றி பேச ஆரம்பித்தார். சிங்கிள் மதர் சைல்டாக வளர்க்கப்பட்டேன். இந்த வீட்டில், நான் அழணும்னாலும், ஒரு விஷயத்தை சொல்லணும்னாலும் முதல்ல ஓடி தேடுறது சாமைத் தான். பில்லர் மாதிரி சம்யுக்தா இருக்காங்க என்றார்.

ரம்யாவை பார்த்து வியக்கேன்

ரம்யாவை பார்த்து வியக்கேன்

சம்யுக்தாவை தொடர்ந்து ரம்யா பக்கம் வந்த மொட்டை தாத்தா, இந்த வீட்ல நான் ரொம்ப பார்த்து வியக்கிறது ரம்யா என்றார். அவரும் ஆர்வமாக என்னவோ சொல்ல வருகிறார் என்று கவனிக்க தொடங்கிய நிலையில் சில நர்ஸுங்க எல்லாம் ஊசி போடுறது தெரியவே தெரியாது. நான் வேற சுகர் பேஷன்ட் இல்லையா, மாசத்துக்கு ஒரு தடவை போடணும்.. இப்படியே வச்சிட்டு இருப்பேன். முடிஞ்சுடுச்சு சார் என்பார்கள் அது போல குத்துனதே தெரியாம குத்துறது ரம்யா என சீண்டினார்.

பாட்டி கேபி

பாட்டி கேபி

பேத்தின்னு சொல்லி தூக்கி சுமந்துட்டு இப்போ சுட்டிக் குழந்தை கேபியை பாட்டின்னு பொசுக்குன்னு சொல்லிட்டார் சுரேஷ். தாத்தா என்ன ஏன் பாட்டின்னு சொல்றீங்க என கேபி உடனே ரியாக்ட் பண்ண ஆரம்பித்தார். உண்மை தான், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்றார். இவர் போற்றுகிறாரா இல்லை வஞ்சபுகழ்ச்சியாக தூற்றுகிறாரா என்றே பெண்களுக்கு குழப்பமாகி விட்டது.

பாசமலர் நிஷா

பாசமலர் நிஷா

நிஷா ரியோ மேல காட்டுற பாசத்தை பார்த்தாலே அவ்ளோ சந்தோஷமாக இருக்கு.. பாசமலர் படம் நல்லா ஓடுச்சுன்னு சொன்னாங்க, நான் இன்னும் அதை பார்க்கல.. ஆனால், இந்த வீட்டில பாசமலர் என்றால் அது நிஷாவும் ரியோவும் தான் என தாத்தா சொல்லும் போது, ரியோ இவர் நல்லா கேம் ஆடுறார் என்பதை புரிந்து கொண்டது போல தலையாட்டினார்.

கண்ணாடி சனம்

கண்ணாடி சனம்

கோபப்படக்கூடாது என்பதை இந்த வீட்டில் எனக்கு கத்துக் கொடுத்தது சனம். அவர் எந்த தப்பும் பண்றது இல்லை. நாம பண்ற தப்பை கண்ணாடி போல பிரதிபலித்து காட்டுகிறார். அவங்க அந்த கோபத்தை மட்டும் விட்டுடணும்னு கேட்டுக்கிறேன். மத்தபடி இந்த வீட்டில இருக்க எல்லா பெண்களும் ஒவ்வொரு மாணிக்கங்கள் என திட்டுறதையும் திட்டிப்புட்டு பாராட்டவும் செய்தார்.

அஷ்ட லக்‌ஷ்மிகள்

அஷ்ட லக்‌ஷ்மிகள்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 8 பெண்களையும் அஷ்ட லஷ்மிகள் என்றே சொல்லி மொட்டை தாத்தா ஓவர் ஐஸ் வைத்து விட்டார். எல்லாரையும் அதனால தான் தாயி, அம்மான்னு கூப்பிடுறேன். கோபம் வந்தா திட்டுவேன் அது வேற என்றவுடன் நிஷா உள்பட அனைத்து பெண்களும் சிரித்து விட்டனர்.

பெரிய கும்பிடு

பெரிய கும்பிடு

அதோடு நிறுத்தாமல், இப்போ நான் என்ன சொல்றதுன்னு தெரியாம நன்றி நிஷா, நன்றி அனிதா, நன்றி ஷிவானி, நன்றி அர்ச்சனா, சம்யுக்தா, சனம் என அனைத்து பெண்களுக்கும் கோடான கோடி நன்றிகளையும் பெரிய கும்பிடையும் போட்டு விட்டார். அப்புறம் நைட் அனிதாவுக்கு தனியா ஆப்பு வைத்தார். அது வேற கதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X