மொட்டை பாஸ் இஸ் பேக்.. பாலாவை கதற விட்ட ஷிவானி.. ஆறுதல் சொல்லும் சுரேஷ்.. அனல் பறக்கும் 3வது புரமோ!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ சும்மா அனல் பறக்கும் விதமாக உள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் தாத்தா அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாவது புரமோவில் பாலாவையும் ஷிவானியையும் காட்டிய நிலையில், மூன்றாவது புரமோவில் பாலாவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார் ஷிவானி.

மறுபடியுமா?

மறுபடியுமா?

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் பாலாவும் ஷிவானியும் மட்டுமே நிறைந்து இருப்பார்கள் என்று தெரிகிறது. முதல் மற்றும் இரண்டாவது புரமோவை தொடர்ந்து மூன்றாவது புரமோவிலும் பாலாவையும் ஷிவானியையுமே பிக் பாஸ் எடிட்டர் ஃபோகஸ் செய்துள்ளார். பிக் பாஸ் வீடே நிரம்பி வழியும் நிலையில், பாலாவையே காட்டுவது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

முதல் மற்றும் இரண்டாவது புரமோவில் பாலாவை ஷிவானி அப்படி ஓரங்கட்ட என்ன காரணம் என்று புரியாமல் தவித்த ரசிகர்களுக்கு மூன்றாவது புரமோவிலேயே விளக்கம் கொடுத்து விட்டனர். பாலாவிடம் தனியாக நின்று பேசிய ஷிவானி நீ ஏன் என்னைப் பத்தி அப்படி பேசின என பாலாவின் முகத்துக்கு நேராக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒண்ணுமே தெரியாது

ஒண்ணுமே தெரியாது

ஷிவானி கேட்டதும், ஒண்ணுமே தெரியாத புள்ள மாதிரி அப்படி அப்பாவி மாஸ்க்கை போட்டுக் கொண்டு, என்ன? என்ன ஆச்சு என்பது போல பாலா கேட்க, நீயாவது பரவாலடா, உனக்கு ஒரு விஷயம் சொன்னா புரியும், அவளுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னா புரியுறதுக்கே டைம் எடுக்கும்னு ஆஜீத்திடம் ஷிவானி பற்றி புறம் பேசிய காட்சிகளை பார்த்து விட்டு உள்ளே வந்து ஓப்பனாக கேட்டு விட்டார்.

நீ என்னப்பத்தி பேசியிருக்க

நீ என்னப்பத்தி பேசியிருக்க

நான் தப்பா காட்டுற மாதிரி எதுவும் பேசல டி என பாலா சொன்னதும், நீ என்னப்பத்தி பேசியிருக்க என ஷிவானி பாலாவை முதல் முறையாக வச்சு விளாசி உள்ள அனல் பறக்கும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. உன்னைப்பத்தி ஏதாவது அப்படி பேசியிருந்தா மன்னிச்சிக்கோ என பாலா கலங்கி விட்டார்.

கண் கலங்கிய பாலா

கண் கலங்கிய பாலா

ஆரியை அடிக்கடி திட்டிவிட்டு மன்னிப்பு கேட்பது போலவே ஷிவானியிடமும் பாலா மன்னிப்பு கேட்கிறார். இதெல்லாம் உலக மகா நடிப்புடா சாமி, மறுபடியும் ஷிவானி நம்பி ஏமாறாதீங்க, இத்தனை நாளா உங்களை யூஸ் பண்ணி ஃபைனலுக்கு பாலா சென்று விட்டர என பாலா கண் கலங்கிய காட்சியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மொட்டை பாஸ் இஸ் பேக்

மொட்டை பாஸ் இஸ் பேக்

பிக் பாஸை விட பெரிய பாஸாக இந்த சீசனில் சுரேஷ் தாத்தா ஆரம்பத்தில் கலக்கினார். ஆனால், அவரை திடீரென காரணம் ஏதும் சொல்லாமல் பிக் பாஸ் குழு சட்டென எவிக்ட் செய்தது. இந்நிலையில், கடைசி ஆளாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சுரேஷ் தாத்தா வந்து இருப்பதையும் இந்த புரமோவில் காட்டி உள்ளனர்.

பாலாவுக்கு ஆறுதல்

பாலாவுக்கு ஆறுதல்

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே பாலாவுக்கு சப்போர்ட்டாக இருந்தவர் சுரேஷ் தாத்தா. இந்நிலையில், மீண்டும் வந்த அவர், ஷிவானி சொல்வது போல எல்லாம் ஒண்ணுமில்லை.. நானும் பார்த்தேன்.. நானே அவ கிட்ட நேர்ல கேட்கிறேன் என பாலாவுக்கு ஆறுதல் சொல்லும் அசத்தலான புரமோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X