கடைசி கொளுத்திப் போடு.. 15 போட்டியாளர்களையும் அகம் டிவி வழியே வச்சு செய்த சுரேஷ் தாத்தா.. இனிமே?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி தனது மனதில் பட்ட விஷயங்களை அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி கொளுத்திப் போட்டதும் அவருக்கான மாஷ் அப் ட்ரிப்யூட்டும் நிகழ்ச்சியை நன்றாகவே நிறைவு செய்தது.

சுரேஷ் தாத்தா ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியேறி உள்ளார் என கூறிவிட்டு, மக்களிடம் இருந்து கமல் லாவகமாக தப்பித்துக் கொண்டார்.

அப்புறம் எதுக்குங்க வாரம் வாரம் ஓட்டுப் போட சொல்றீங்க என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. நாமளும் கொளுத்திப் போடுவோம்!

15 போட்டியாளர்கள்

15 போட்டியாளர்கள்

ஒரு வழியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இனி 15 போட்டியாளர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு இருக்கப் போகிறார்கள். நடுவில் அசீம் வந்தால் தான் உண்டு. சுரேஷ் தாத்த வெளியே வாங்கன்னு கமல் சொன்னதும், யாரையும் ஓவரா சீன் கிரியேட் பண்ண விடாமல் சட்டு புட்டுன்னு மூட்டை முடிச்சியை தூக்கிட்டு அடுத்த சில நிமிடங்களில் கமல் முன்னாடி ஆஜர்.

கடைசி சரவெடி

கடைசி சரவெடி

பிக் பாஸ் வீட்டில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளதால், இப்பவே வெளியேறிய நீங்க, கடைசியா ஒரு முறை எல்லோரையும் கொளுத்திப் போட்டு, நல்லா ஒரு சரவெடி வெடிச்சுட்டுப் போங்க என கமல் நல்லாவே கோர்த்து விட, அதற்கு என்ன பேஷா பண்ணிடலாம் என சுரேஷும் அகம் டிவி வழியே அகத்தை நோக்கினார்.

ஷிவானிக்கு சூப்பர் வேலை

ஷிவானிக்கு சூப்பர் வேலை

ஏற்கனவே ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டில் முழு நேரமாக பார்த்துக் கொண்டிருக்கும் வேலையையே மீண்டும் அவருக்கு கொடுத்து நல்லா கொளுத்திப் போட்டாரு சுரேஷ். பாலாவையும், சம்யுக்தாவையும் பார்த்துக்கோமா என சுரேஷ் சொன்னது ரசிகர்களை சோகத்தில் இருந்து கம்பேக் கொடுத்து சிரிக்க வைத்தது.

ஓவரா ரூல் பண்ணாதீங்க

ஓவரா ரூல் பண்ணாதீங்க

15 போட்டியாளர்களையும் தனித்தனியாக ஒவ்வொரு விஷயமாக சொல்லி கொளுத்திப் போட்டுக் கொண்டே வந்த சுரேஷ் தாத்தா, அர்ச்சனா அக்காவிடம் வந்த போது, நீங்க ஆங்கர் பண்றீங்கனு சொன்னா பெருமைபடுங்க, தப்பா எடுத்துக்காதீங்க என பாராட்டி விட்டு, யாரிடமும் எந்தவொரு விஷயத்தையும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க, அப்படி பண்ணா அது ஒவரா ரூல் பண்ற மாதிரி தெரியும் என சரவெடி வெடித்தார்.

மோசமான ஆளு ரம்யா

மோசமான ஆளு ரம்யா

பிக் பாஸ் வீட்டிலேயே ரொம்ப மோசமான பிளேயர் என்றால் அது ரம்யா பாண்டியன் தான் என்று சுரேஷ் தாத்தா சொல்லும் போது, இனிமே இந்த டிரெஸ் நல்லா இருக்குன்னு சொல்ல யார் இருக்கான்னு கேட்டு ஸ்கோர் பண்ணிட்டாங்க, அதுதான் தமிழ் நாடே பார்த்து கமெண்ட் அடிக்குதே.. நீ ஏன்மா கவலை படுற என்று பேசிவிட்டு மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு விஷயமாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

Recommended Video

நீதிபதியாக சுச்சி செய்தது தவறு, கமல்ஹாசன் வருத்தம் | Bigg boss 4 Tamil
எல்லாமே மிருகங்கள்

எல்லாமே மிருகங்கள்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதுமே சரியா சாப்பிடாமல் இருந்தார் சுரேஷ் தாத்தா. மேலும், கடைசி இரண்டு நாட்களில் வெறும் தண்ணீர் சோறு மட்டுமே சாப்பிட்டு ரொம்பவே மன வருத்தம் அடைந்தார். அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியேறுகிறார் என்பது போல ஷோவை முடித்து விட்டனர். மீண்டும் வைல்டு கார்டா வாங்கன்னு சனம் கூப்பிட்ட போது, எல்லாமே மிருகங்கள், நான் இனி ஜென்மத்துக்கும் வரவே மாட்டேன் எனக் கூறிவிட்டு தனது பிக் பாஸ் பயணத்திற்கு எண்ட் கார்டு போட்டு விட்டார். மிஸ் யூ தாத்தா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X